
தேவையான பொருட்கள்:
- தக்காளி - 4
- சின்ன வெங்காயம் - 5 (விருப்பப்பட்டால்)
- கடலை மாவு - 1 கப்
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய்
- செய்யும் முறை:
- தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோலுரித்துக்கொள்ளவும்.
- தோலுரித்த தக்காளியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
- அதனுடன் வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
- தோசைக்கல்லில் தக்காளி கலவையை ஒரு கரண்டி ஊற்றி (தேய்க்க வேண்டாம்) எண்ணெய் சேர்த்து வேகவிடவும்.
- சுவையான தக்காளி வெஜ் ஆம்லெட் ரெடி

0 comments:
Post a Comment