Thursday, September 22, 2016


முடக்கத்தான் துவையல் க்கான பட முடிவு

 தேவையான பொருட்கள்:


  • முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு



  • புளி - சிறிது


  • உப்பு - தேவையான அளவு


  • வெல்லத் துருவல் - 3 தேக்கரண்டி


  • எண்ணெய் - 2 தேக்கரண்டி


  • வடகம் - ஒரு தேக்கரண்டி


  • பூண்டு - 10 பல்


  • காய்ந்த மிளகாய் - 5


  • இஞ்சி - சிறு துண்டு


  • சீரகம் - அரை தேக்கரண்டி


  • மிளகு - அரை தேக்கரண்டி


  • நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி


  • கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி


  • பெருங்காயப்பொடி - சிறிது

செய்யும் முறை 

வாணலியில் எண்ணெய் ஊற்றி வடகம் (வடகம் இல்லையெனில் அதை தவிர்க்கவும்) பூண்டு, காய்ந்த‌ மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் சுத்தம் செய்த‌ முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் சிறிதளவு புளி, தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து ஆற‌ வைக்கவும்.
ஆறியதும் வெல்லத் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து அரைத்த‌ விழுது சேர்த்து பெருங்காய‌ பொடி சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் இடையிடையே எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
சத்தான‌ முடக்கத்தான் கீரை துவையல் தயார்.
இதே முறையில் முடக்கத்தான் கீரைக்கு பதிலாக‌ கறிவேப்பிலை, தூதுவளை, வல்லாரை, புதினா எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
இந்த துவையல் ஒரு வாரம் வரை கெடாது.
நீண்ட‌ நாள் வைக்க‌ விரும்புவோர் மேலும் எண்ணெய் ஊற்றி, வினிகர் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
வெல்லம் சேர்க்காமலும் செய்யலாம். ஆனால் முடக்கத்தான் கசப்பு சுவை உடையது. வெல்லம் சேர்க்காவிடில் அதிகம் கசப்பு தெரியும்.

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget