புளி சேவை

தேவையான பொருட்கள்:
- ரைஸ் சேவை - 200 கிராம்
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- வெல்லம் - ஒரு தேக்கரண்டி
- எள் - ஒன்றரை தேக்கரண்டி
- வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
- மஞ்சள் தூள் - சிறிது
- உப்பு - சுவைக்கு
- தாளிக்க:
- நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- உளுந்து - அரை தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 2 கொத்து
- மிளகாய் வற்றல் - 4
- பெருங்காயம் - சிறிது
செய்முறை:

புளியை அரை கப் நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைக்கவும். சேவையை வேக வைத்து தயாராக வைக்கவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி இரண்டாக உடைத்து வைக்கவும். எள் சடசடவென பொரிய வறுத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க விடவும். இதில் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் கரைத்து வைத்த புளித் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கலவை புளி வாசம் போக நன்றாக கொதித்ததும், வெல்லம் சேர்த்து கலந்து விடவும். அதில் சமைத்து வைத்த சேவை, வறுத்த வேர்க்கடலை மற்றும் எள் சேர்த்து கலந்து விடவும்.

ஒன்று போல பிரட்டி விட்டு (சேவை உடையாமல்) 2, 3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுக்கவும்.

சுவையான புளி சேவை தயார். அப்பளம், வற்றல் அல்லது உருளை வறுவலுடன் பரிமாறலாம்.

0 comments:
Post a Comment