மொஹல் சிக்கன் கறி
தேவையான பொருட்கள்:
- கொத்திய கோழிக்கறி - அரைக் கிலோ
- பச்சை மிளகாய் - 6
- தக்காளி - 4
- பெரிய வெங்காயம் - 2
- மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
- பூண்டு - 10 பற்கள்
- இஞ்சி - 2 அங்குலத் துண்டு
- நெய் - 4 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:

இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.

கறி முக்கால் பதம் வெந்த நிலையில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்கவும்.

அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கவும்.

சுவையான மொஹல் சிக்கன் கறி ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்துச் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

0 comments:
Post a Comment