பனீர் ப்ரெட் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:
- ப்ரெட் ஸ்லைஸ் - 10
- பனீர் - 100 கிராம்
- முட்டை - 2
- வெங்காயம் - 4
- தக்காளி - 2
- கொத்துமல்லித் தழை - தேவையான அளவு
- எண்ணெய் - 250 மி.லி.
- இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 3
- மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
- மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:

பனீர், வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லித் தழை இவை அனைத்தையும் சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டைகளை உடைத்து ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

முட்டை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பனீர் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மசாலாத் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்.

தண்ணீர் வற்றியதும் அந்த கலவையை ஒரு ப்ரெட் ஸ்லைஸ் மீது வைத்து அதன் மேல் மற்றொரு ஸ்லைஸ் வைத்து மூடி தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

சுவையான பனீர் ப்ரெட் ரோஸ்ட் தயார். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

0 comments:
Post a Comment