நிலக்கடலை குலோப்ஜாமூன்

தேவையான பொருட்கள்:
- நிலக்கடலை - 150 கிராம்
- முந்திரி பருப்பு - 150 கிராம்
- கெட்டிபால் - 250 மி.லி
- மைதா - 100 கிராம்
- சர்க்கரை - 300 கிராம்
- பேக்கிங் பவுடர் - சிட்டிகை
- ஏலக்காய் - 3
- கேசரி பவுடர் - சிட்டிகை
- எண்ணெய் - 250 மி.லி
செய்முறை:

நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். நிலக்கடலை, முந்திரிப்பருப்பு இரண்டையும் பாலில் ஊற விடவும்.

முந்திரி மற்றும் கடலை நன்கு ஊறியதும் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மைதா, பேக்கிங் சோடா, ஏலப்பொடி, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து உருட்டும் பதத்திற்கு பிசையவும்.

மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்க்ரையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காயை தட்டி போட்டு பாகு காய்ச்சவும்.

பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் எடுத்து பரிமாறவும். சுவையான நிலக்கடலை ஜாமூன் ரெடி.

0 comments:
Post a Comment