

தேவையான பொருட்கள்
- மக்ரூனி -- 1கப்
- கேரட் -- 1/4 கப் (சதுரமாக வெட்டியது)
- பச்சை பட்டாணி -- 1/4 கப்
- பீன்ஸ் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது)
- வெங்காயம் -- 1 என்னம் (நீளமாக நருக்கியது)
- தக்காளி -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
- தனியா தூள் -- 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் -- 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் -- 2 சிட்டிகை
செய்யும் முறை
- காய்களை தனியாக கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
- மக்ரூனியை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளாவும்.
- வாணலியில் எண்ணைய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.
- நன்கு பேஸ்ட் போல ஆனதும் தனியா தூள்,கரம் மசாலா, மிளகாய்தூள் போட்டு வதக்கி ஒரு கை தண்ணீர் தெளிக்கவும்.
- பின் வேகவைத்த காய்கறி களை சேர்த்து கிளறி மீண்டும் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து 3 நிமிடம் வேகவைக்கவும்.
- இதனை வேகவைத்த மக்ரூனியை வைத்து அதன் மேல் இந்த கலவையை ஊற்றி பரிமாறலாம்.

0 comments:
Post a Comment