சாமை இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
செய்முறை:

சாமையை வெறும் கடாயில் லேசாக வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்.

சிறிய கண் உள்ள சல்லடையில் இடித்த மாவை போட்டு சலிக்கவும்.

சலித்த மாவை மறுபடியும் வெறும் கடாயில் குறைந்த சூட்டில் நன்கு வறுக்கவும்.

மாவு நன்கு வறுப்பட்டவுடன் உப்பு கலந்த சூடான தண்ணீரை ஊற்றி மாவை கெட்டியாக பிசையவும்.

இடியாப்ப அச்சுகளில் மாவை செலுத்தி இடியாப்பங்களாக பிழியவும்.

சத்தான சாமை இடியாப்பம் தயார். விரும்பிய கிரேவியுடன் பரிமாறவும்.

0 comments:
Post a Comment