வடைகறி

தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு -- 1 கப்
- வெங்காயம் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
- தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
- மஞ்சள்தூள் -- 1சிட்டிகை
- மிளகாய் தூள் -- காரத்திற்கேற்ப
- இஞ்சி -- 1 அங்குலம் அளவு
- பச்சை மிளகாய் -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
- கிராம்பு -- 2 என்னம்
- பட்டை -- 1 அங்குலம் அளவு
- பூண்டு -- 4 பல்
- எண்ணைய் -- தாளிக்க
- உப்பு -- ருசிக்கேற்ப
செய்யுமமுறை:

- கடலை பருப்பை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
- மிக்ஸியில் போட்டு கோதுமை ரவை போல பக்குவத்தில் அரைக்கவும்.
- பின் இதை உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்து உதிர்க்கவும்.
- இஞ்சி,பூண்டை விழுதாக அரைக்கவும்.
- வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி போட்டு மீண்டும் நன்கு வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள் போடவும்.
- கலவை நன்றாக கொதித்ததும் உதிர்த்து வைத்துள்ள கடலைபருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவேண்டும்.
- கலவை கொதித்து வற்றியதும் வாசனை வந்ததும் இறக்கி பறிமாறலாம்.
- வடை கறி ரெடி.

0 comments:
Post a Comment