தேவையான பொருட்கள்
- குடல் -- 1 கிலோ(சுத்தம் செய்தது)
- இஞ்சி -- 2 அங்குலம் அளவு (நசுக்கியது)
- பூண்டு -- 12 என்னம் (நசுக்கியது)
- சின்ன வெங்காயம் -- 3/4 கப் (நீளமாக நறுக்கியது)
- சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை -- 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- அரைக்க:
- தேங்காய் -- 2 துண்டு
- சீரகம் -- 3/4 ஸ்பூன்
- சோம்பு -- 3/4 ஸ்பூன்
- தாளிக்க:
- கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
- பட்டை -- 1 அங்குலம் அளவு
- கிராம்பு -- 4 என்னம்
- அன்னாசிப்பூ --- 2 என்னம்
- தக்காளி -- 2 என்னம் (சிறியது பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை -- 1 இனுக்கு
செய்யும் முறை
- சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், 1ஸ்பூன் விளக்கெண்ணைய் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும்.
- ஸ்ட்ரீம் வந்த பின் வெயிட் போட்டு ஹைய்யில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவைக்கவும்.
- இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணையில் வதக்கி உப்பு போட்டு அதனுடன் வேகவைத்த குடலை சேர்த்து வதக்கவும்.
- பின் 3/4 கப் தண்ணீர் சேர்த்து சாம்பார் பொடி போட்டு ஒரு கொதி கொதித்ததும் அரைத்த மசாலா கலவை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
- பின் வேறு வாணலியில் கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அன்னாசிப்பூ தாளித்து தக்காளி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி கொதிக்கும் குடல் கலவையில் கொட்டவும்.
- குடல் கலவை வெந்து எண்ணைய் மேலே மிதந்து க்ரேவியாக வரும் வரை சிம்மில் வைத்து சமைக்கவும்.
- இறக்கும் சமயம் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- குடல் கறி ரெடி.

0 comments:
Post a Comment