பெரிய வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்:
- பெரிய வெங்காயம் - ஒன்று
- கடலைப் பருப்பு - அரை மேசைக்கரண்டி
- புளி - சிறு நெல்லிக்காய் அளவு
- பெருங்காயம் - குண்டு மணி அளவு
- தனியா - அரை மேசைக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 2
- உப்பு - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து அதில் கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுத்து எடுக்கவும்.

பிறகு அதில் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் வதக்கியவற்றை போட்டு புளி, உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும்.

சுவையான பெரியவெங்காய சட்னி தயார்.

0 comments:
Post a Comment