சேப்பங்கிழங்கு மசாலா ப்ரை

தேவையான பொருட்கள்:
- சேப்பங்கிழங்கு- அரை கிலோ
- இஞ்சி - 25கிராம்
- பூண்டு 5இதழ்
- மிளகாய் வத்தல்- 10
- சோம்பு - 1 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி -அரை ஸ்பூன்
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
- சேப்பங்கிழங்கை முதலில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஒருபாத்திரத்தில் கிழங்கு முழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.தோல் உரிக்கும் அளவு வேக வைக்கவேண்டும்.
- நன்றாக வேக விட்டால் கிழங்கு பிசு பிசுப்பாக இருக்கும்.
- வேக வைத்த கிழங்கின் தோலை உரித்து நெடுக்கு வசமாக நான்காக வெட்ட வேண்டும்.
- அரைக்க தேவையானவற்றை (மிளகாய் வத்தல், சோம்பு,இஞ்சி,பூண்டு,மஞ்சள்,உப்பு,)மிக்சியில் சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்க வேண்டும்.(மிளகாய் வத்தலை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அரைக்க வேண்டும்.)
- ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய கிழங்கை போட்டு மொறு மொறுப்பாக சிவந்ததும் ஒரு தட்டில் தனியாக எடுத்து விட வேண்டும்.
- கிழங்கு அனைத்தையும் வறுத்து எடுத்து விட்டு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு காய்ந்ததும் மிக்சியில் உள்ள விழுதை அந்த எண்ணையில் விட்டு நன்குவதக்க வேண்டும்.(அடுப்பை குறைந்த தீயில் எரிய விட வேண்டும்.) தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
- விழுது கெட்டிப் பட்டு வாசனை வந்த உடன் கிழங்கை அதில் போட்டு நன்கு புரட்டி விட்டு மசாலா முழுவதும் கிழங்கில் மொறு மொறுப்பாக சேர்ந்தவுடன் இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறலாம்.

0 comments:
Post a Comment