Saturday, June 10, 2017

இதுதான் எங்கள் உணவு......5


                                               சப்போட்டா, பப்பாளி, ஓட்ஸ் பால்







சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய பயன்கள்!


சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம்  கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.

கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன்  பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு.
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். சப்போட்டா பழக்கூழ், கோடையில்  ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள்,  இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நன்கு தூக்கம் வரும்.
ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. 
சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த  மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும்  பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ்  சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப்  பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.


பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்


பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.


ஓட்ஸ் பால் மருத்துவ பயன்கள்:

இருதயநோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் ஓட்ஸ் உதவுகிறது.
ஓட்ஸ்சில் நார்சத்து அதிகம்.
ஓட்ஸில் உள்ள மெக்னீசியம் இரத்த உறைக்கட்டி ஏற்படுவதை குறைக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளது. 
மன அழுத்தத்தை அண்ட விடாது. பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் சின்ன வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். 
குடல் சார்ந்த ஆரோக்கியத்திற்கு பல பயன்களை அளிக்கிறது.



                                                    சப்போட்டா, பப்பாளி, ஓட்ஸ் பால்  இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.
          

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget