
தேவையான பொருட்கள்
- மீடியமான முழு மீன் - இரண்டு
- பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி
- காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேகக்ரண்டி
- மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
- உப்பு தூள் - ஒன்றரை தேக்கரண்டி(தேவைக்கு)
- எலுமிச்சைச்சாறு - மூன்று மேசைக்கரண்டி
- பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
- வினிகர் - ஒரு தேக்கரண்டி
- உருளைக்கிழங்கு - இரண்டு
- வெங்காயம் - ஒன்று
- செய்யும் முறை
- மீனை சுத்தம் செய்து இடையிடையே நன்கு ஆழமாக கீறி விடவும்.
- மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக்களையும் மீனில் நன்கு பிரட்டி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
- 200 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 35 நிமிடம் பேக் செய்யவும்.
- முதலில் உருளைக்கிழங்கை வட்ட வடிவமாக கட்செய்து ட்ரேயின் அடியில் வைத்து அதன் மேல் மீனை வைத்து மேலே வெங்காயத்தை வட்டவடிவமாக கட் செய்து வைக்கவும்.
- இது பேக் செய்யும் போது தண்ணீர் கீழே நிற்கும். அதற்கு முதலில் மேல் தீயில் 15 நிமிடம் வைக்கவும்.
- அடுத்து மேலும் கீழும் உள்ள தீயை செலக்ட் செய்து 10 நிமிடம் வைக்கவும்.
- கடைசியாக அடியில் ட்ரேயில் வைத்து பத்து நிமிடம் வைக்கவும்.
- சுவையான பேக்டு முழு மீன் கிரில் ரெடி.

0 comments:
Post a Comment