தேவையான பொருட்கள்
- பனீர் துண்டுகள் - ஒரு கப்
- புளிக்காத தயிர் - ஒரு கப்
- பெரிய வெங்காயம் - 3
- பச்சைப் பட்டாணி - அரை கப்
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- பிரியாணி இலை - 2
- கிராம்பு - 2
- பட்டை - சிறியத் துண்டு
- பூண்டு - 2 பல்
- மிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
- தனியாத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
- தக்காளி - 2 கப்
- உப்பு - தேவையான அளவு
- செய்யும் முறை

பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

தக்காளியை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

பின்னர் அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குறைந்த தீயில், பனீரை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றை சேர்த்து, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தனியாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.

சில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேக வைத்த பட்டாணி மற்றும் பொரித்த பனீரை சேர்க்கவும்.

எல்லாம் சேர்ந்து ஒன்றாக கொதித்ததும் இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி மேலே தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.

0 comments:
Post a Comment