வேர்க்கடலை புட்டு

- வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
- புட்டு மாவு - ஒரு கப்
- சர்க்கரை (அ) வெல்லம் - ஒரு கப்
- துருவிய தேங்காய் - கால் கப்
- ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
- நெய் - 2 தேக்கரண்டி
- முந்திரிப்பருப்பு - 10

அரை டம்ளர் தண்ணீருடன் உப்பு சேர்த்து கலக்கி புட்டு மாவில் தெளித்து கிளறவும்.

இந்த புட்டு மாவை இட்லி பானையில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

மாவு வெந்ததும் கட்டி இல்லாமல் உதிர்த்து விட்டு அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை (அ) வெல்லம், போட்டு கிளறி விடவும்.

வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து புட்டுடன் சேர்த்து கிளறவும்.

பின்னர் நெய்யில் வறுத்த முந்திரியை போட்டு நன்றாக கிளறி பரிமாறவும். சுவையான வேர்கடலை புட்டு தயார்.
சாதாரண புட்டு போல இருந்தாலும் வேர்கடலை போட்டு செய்வது வித்யாசமாக இருக்கும்.

0 comments:
Post a Comment