தேவையான பொருட்கள்
- காலிஃப்ளவர் - ஒன்று
- பெரிய வெங்காயம் - ஒன்று
- தக்காளி - ஒன்று
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
- முட்டை - 2
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - தாளிக்க
- தாளிக்க:
- சீரகம் - அரை தேக்கரண்டி
- கடலை உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 6 இதழ்
- வரமிளகாய் - 2
- செய்யும் முறை

முதலில் காலிஃப்ளவரை 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வரமிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி தக்காளி குழைந்ததும் காலிஃப்ளவரை போட்டு பிரட்டவும்.

பின் மல்லித்தூளை சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி பிரட்டி விட்டு, வெந்ததும் இறக்கவும்.

சுவையான காலிஃப்ளவர் முட்டை பொரியல் ரெடி. மிளகுத் தூள் சேர்த்தும் இறக்கலாம்

0 comments:
Post a Comment