Tuesday, January 24, 2017




தேவையானப் பொருட்கள்: 

வாழைப்பழம் - ஒன்று 
ஆப்பில் - ஒன்று 
கொய்யா - இரண்டு 
சப்போட்டா - இரன்டு 
ஸ்ராபெரி - நான்கு 
மாம்பழம் - ஒன்று 
பைனப்பில் எஸன்ஸ் - இரண்டு துளி 
சர்க்கரை - அரை கப் 
பால் - இரண்டு டம்ளர் 
ஐஸ் கியுப்ஸ் - ஆறு 

செய்முறை: 

எல்லா பழங்களையும் நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு பால், தண்ணீர், ஐஸ் கியுப், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுங்கள். கொய்யாபழத்தை மட்டும் தனியாக தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சேர்க்கவும் ஏனென்றால் கொட்டை இருக்கும். கடைசியில் ஒன்றாக சேர்த்து கலக்கி ஜூஸ் டம்ளரில் ஊற்றி பறிமாறவும். 



தேவையான பொருட்கள்:


திராட்சைப்பழம்         -1கிலோ

சர்க்கரை            -1/2கிலோ

தண்ணீர்             - தேவையான அளவு

சோடியம்
பென்சோவேட்        -2 கிராம்

சிட்ரிக் அமிலம்        -6 கிராம்


செய்முறை:


திராட்சைப்பழக் கொத்துக்களில் நல்ல தரமான பழங்களைத் எடுத்து கொள்ளவும். பழங்களைக் கழுவியபின் காம்புப் பகுதிகளை அகற்றி சிறிதளவு நீர் சோத்து சூடாக்கவும். இதனால் பழங்கள் மிருதுவாகும். அதன்பின் பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சாறு எடுக்கவும். மெல்லிய துணி மூலம் சாறை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

சாக்கரையில் பாகு தயாரித்து. அதில் திராட்சைப் பழச்சாறை கொட்டி கலக்கவும். குறைந்த அளவு நீரில் சிட்ரிக் அமிலத்தையும் கலக்கி சாற்றுடன் சோக்கவும். இந்தப் பழரசத்தை பாட்டில்களில் ஊற்றியபின் காற்றுப்புக வண்ணம் அடைத்து எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.



தேவையானவை:

தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6
கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: 

கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
இது வெயிலுக்கு மிகவும் நல்லது. .உடல் சூட்டை தணிக்கும்.



தேவையானவை:

கொய்யா பழம் - 1/2 கிலோ.
சர்க்கரை - 200 கிராம்.
எலுமிச்சம் பழம் - 1.
கோவா எசன்ஸ் - 4 துளிகள்.
தண்ணீர் - தேவையான அளவு.
உப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

500 மி. லி தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு கொதிக்க விட்டு,ஆற விடவும். 100 மி. லி தண்ணீரில் தோலெடுத்து நறுக்கியபழங்களைப் போட்டு, நன்கு வேக விடவும்.

பிறகு நன்கு மசித்த பழ விழுதை எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரைசிரப்பில் கலக்கவும். மீதமுள்ள தண்ணீர் எலுமிச்சைச் சாறு,எசன்ஸ் சேர்த்து வடிகட்டி, குளிர வைக்கவும்.


தேவையான பொருள்கள்:

பழுத்த வாழைப்பழங்கள்  - 4 
சர்பத் - தேவையான அளவு
ஜஸ்கட்டி  - 4  

செய்முறை:

இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து,மிக்சியல்   அடித்து  கொள்ளவும்.
அதனுடன்   தேவையான அளவு சர்பத் சேர்த்து   ஜஸ்கட்டி  சேர்த்து தேவையான அளவு   தண்ணீர் ஊற்றி கலந்து பரிமாறவும். சுவையான  பனானா  சர்பத்   ரெடி.

Monday, January 9, 2017




தேவையான பொருள்கள்:

நறுக்கிய வெங்காயம் - 1 
நறுக்கிய  தக்காளி - 1
பொடியாக நறுக்கிய  காலிஃப்ளவர் - 1  கப் 
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்
தனியாதூள் - 1  ஸ்பூன்
உப்பு - தேவைக்கு, 
மல்லி இலை  - 2   ஸ்பூன்
தோசைமாவு -தேவைாயான அளவு
சோம்பு - 1ஸ் பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு  - தேவையான அளவு
கறிவேப்பிலை -  சிறிதளவு

செய்முறை:
கடாயில் எண்ணெயை காயவைத்து சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 


இத்துடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு,சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

பின்பு காலிஃப்ளவர் சேர்த்து    10 நிமிடம்  நன்கு  வேகவைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். 

தோசை வார்த்து அதில் மசாலாவை வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து, சூடாக பரிமாறவும். சுவையான  கோபி மசால் தோசை ரெடி


தேவையான பொருள்கள்


நறுக்கிய வெங்காயம் - 1 
நறுக்கிய  தக்காளி - 1
பொடியாக நறுக்கிய  காலிஃப்ளவர் - 1  கப் 
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்
தனியாதூள் - 1  ஸ்பூன்
உப்பு - தேவைக்கு, 
மல்லி இலை  - 2   ஸ்பூன்
தோசைமாவு -தேவைாயான அளவு
சோம்பு - 1ஸ் பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு  - தேவையான அளவு
கறிவேப்பிலை -  சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெயை காயவைத்து சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 


இத்துடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு,சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

பின்பு காலிஃப்ளவர் சேர்த்து    10 நிமிடம்  நன்கு  வேகவைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். 

தோசை வார்த்து அதில் மசாலாவை வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து, சூடாக பரிமாறவும். சுவையான  கோபி மசால் தோசை ரெடி 




தேவையான பொருள்கள்:

வறுத்த வெள்ளை ரவை - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
கேரட் - 2
தேங்காய் - சிறிதளவு
முந்திரி - 3
இஞ்சி - 1 துண்டு
கடுக  சீரகம் - தாளிக்க தேவையானவை

செய்முறை:

ரவை, தயிர் இரண்டையும் உப்பு போட்டு கலந்து  அரை மணி நேரம்  ஊற வைக்கவும்.


கேரட் முந்திரி தேங்காய்  இஞ்சி  அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனை ஊறவைத்தமாவுடன் நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு   கடாயில்   எண்ணெய் ஊற்றி   கடுகு  சீரகம் போட்டு தாளித்து மாவு கலவையில் கொட்டவும்.

பின்பு  இட்லி பாத்திரத்தில் சாதரணமாக  இட்லி வேகவைப்பது போல்   அனைத்து மாவையும் இட்லிகளாக  வேகவைத்து எடுக்கவும்.


சுவையான  ரவா  இட்லி ரெடி 

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget