Friday, September 30, 2016

மட்டன் கோலா உருண்டை கிரேவி

மட்டன் கோலா உருண்டை கிரேவி க்கான பட முடிவு

தேவையான பொருட்கள்:
  • கோலா உருண்டைக்கு:
  • கொத்திய ஆட்டிறைச்சி - கால் கிலோ
  • பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி அளவு
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • பூண்டு - 6 பல்
  • இஞ்சி - ஒரு சிறு துண்டு
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - 6
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
  • தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு
  • கிரேவிக்கு:
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - 2
  • இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • தேங்காய் - ஒரு மூடி
  • கசகசா - 2 தேக்கரண்டி
  • முந்திரி - 10
  • குழம்பு மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
  • சோம்புத் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
 செய்முறை:   

பொட்டுக்கடலையை நைசாகப் பொடித்து வைக்கவும்.
கொத்திய கறியை நன்கு அலசிவிட்டு, அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கறியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, தேங்காய் துருவல் மற்றும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும். (உருட்டும் பதம் வரும் வரை பொட்டுக்கடலை மாவு சேர்த்தால் போதும்).
கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு பிசைந்த கறிக் கலவையை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், உருட்டிய உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கிரேவி செய்வதற்கு தேங்காயுடன் கசகசா மற்றும் முந்திரி சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து, இறக்குவதற்கு முன் கோலா உருண்டைகளைச் சேர்க்கவும். (கிரேவி ரொம்ப கெட்டியாக இருக்க வேண்டாம். உருண்டைகள் ஊறும் போது தடிமன் சரியாக இருக்கும்).
சுவையான மட்டன் கோலா உருண்டை கிரேவி தயார். பிரியாணி, புலாவ், ப்ரிஞ்சி சாதம் அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும். பார்ட்டிகளுக்கு செய்வதற்கு நல்ல ரிச்சாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget