காரட் கீர்
தேவையான பொருட்கள்:
- காரட் - 3
- பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி
- பால் - அரை கப்
- பாதாம் பருப்பு - 8
- சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி
- உப்பு - ஒரு சிட்டிகை
செய்யும் முறை

காரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.

தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம். சுவையான காரட் கீர் தயார்.


0 comments:
Post a Comment