வடா பாவ்

தேவையான பொருட்கள்:
- வடா செய்வதற்கு :
- உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது - ஒரு கப்
- பச்சைமிளகாய் - 2
- இஞ்சி - சின்ன துண்டு
- பூண்டு - ஒன்று
- லெமன் ஜூஸ் - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - அரை தேக்கரண்டி
- சீரகம் - கால் தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைகேற்ப
- கொத்தமல்லித் தழை - ஒரு பிடி
- எண்ணெய் பொரிக்க - கால் லிட்டர்
- மாவு கரைக்க:
- கடலை மாவு - ஒரு கப்
- மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவைகேற்ப
- பாவ்விற்கு:
- சதுரமான பன் - 6
- புதினா சட்னி - 2 தேக்கரண்டி
செய்முறை:

வடா செய்ய தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக கலந்து சிறிது நேரம் வைக்கவும்.

மாவாக கரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வடா மசாலாவை எடுத்து உருண்டைகளாகவோ அல்லது வட்டமாகவோ தட்டி கடலை மாவு கரைசலில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

புதினா சட்னி அவரவர் விருப்பத்திற்கேற்ப அரைத்துக் கொள்ளவும்.

வடா பாவ் பரிமாற : பன்னை இரண்டாக நறுக்கி ( பாவ் பாஜிக்கு செய்வது போல்) அதில் புதினா சட்னியை இரு பக்கங்களிலும் தடவி இந்த சூடான வடாவை ஒரு பக்கத்தில் வைத்து அடுத்த ஸ்லைஸால் மூடி உடனே பரிமாறவும்.

சுவையான வடா பாவ் தயார். சூடாக பரிமாறவும். இதை பர்த்டே, கெட் டு கெதர், டின்னர் பார்ட்டிகளுக்கு செய்து அசத்தலாம்.

0 comments:
Post a Comment