
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு - 100 கிராம்
- பொரி அரிசி மாவு - 50 கிராம்
- இறால் - 50 கிராம்
- வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
- பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
- உப்பு - தேவையான அளவு
- துருவிய தேங்காய் - ஒரு கப்
- எண்ணெய் - 100 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
- கொத்தமல்லித் தழை - 15 கிராம்
- புதினா - 15 கிராம்
- செய்யும் முறை

பொரி அரிசி மாவிற்கு வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை பொரியும் வரை வறுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பொரி அரிசி மாவு தயார்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி இறாலை வதக்கவும். இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், மல்லி, புதினா, துருவிய தேங்காயை சேர்த்து மேலும் 3 நிமிடம் கிளறவும். இறால் விழுது தயாரானவுடன் அதனை ஆறவிடவும்.

ஆறியவுடன் அதில் அரிசி மாவு மற்றும் அரைத்த பொரி அரிசி மாவினை சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து பிசையவும்.

இதை கொழுக்கட்டையாக பிடித்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான இறால் கொழுக்கட்டை தயார்.

0 comments:
Post a Comment