Wednesday, November 30, 2016

சாக்கோ ரோல் - CHOCO ROLL






தேவையான பொருட்கள்:


  • அவுட்டர் லேயர் செய்ய:

  • ஏரோ ரூட் பிஸ்கட் (அ) மேரி (அ) பிரிட்டானியா பிஸ்கட் - அரை பாக்கெட்

  • கோகோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி

  • பவுடர் சுகர் - ஒரு தேக்கரண்டி

  • பால் - சுமார் ஒரு கப் (அ) தேவைக்கு

  • ஃபில்லிங் செய்ய:

  • இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் - அரை தேக்கரண்டி

  • ரூம் டெம்பரேச்சரில் வைத்த பட்டர் - கால் கப்

  • பவுடர் சுகர் - அரை கப்

  • வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி

  • வால்நட் - பொடித்தது
செய்முறை:   

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பிஸ்கட்டை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கி க்ரீம் பதத்தில் அடித்து தனியே வைக்கவும். வால்நட்டை மட்டும் தனியாக வைக்கவும்.
அவுட்டர் லேயர் செய்ய வேண்டிய கலவைகளை ஒன்றாக போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து பிசையவும்.
நன்கு ஒட்டாத பதத்தில் சப்பாத்தி மாவு போல வர வேண்டும்.
பின் அதை உருளையாக உருட்டி, ஃபாயில் பேப்பரில் திரட்டவும். மிகவும் மெல்லியதாக திரட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
காஃபி பட்டர் க்ரீமை அதன் மேலே வைத்து, கத்தியால் சமமாக தடவவும். பின் பொடித்த வால்நட்டை தூவி விடவும்.
அதை அப்படியே பக்குவமாக உருட்டி, பின் ஃபாயில் கொண்டு அதை சுருட்டி குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின் அதை வட்டமாக வெட்டி பரிமாறவும். சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு விரைவில் செய்ய கூடிய சாக்கோ ரோல் தயார். இதற்கு கண்டன்ஸ்டு மில்க் அல்லது மில்க் மெயிட் தேவை இல்லை. காஃபி க்ரீமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்



Saturday, November 26, 2016

ஹனி பேக்டு பனானா  -  HONEY BAKED BANANA







தேவையான பொருட்கள்:


  • வாழைப்பழம் - 2
  • தேன் - தேவைக்கு
  • எலுமிச்சை - பாதி
  • பொடித்த பட்டை - கால் தேக்கரண்டி
  • சீரியல்ஸ் -அரை கப்
 செய்முறை:  

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு வாழைப்பழத்தை மேலிருந்து இரண்டாக நறுக்கவும். அதில் தேனைத் தடவி அதன் மேல் பட்டையைத் தூவி விடவும்.
இந்த பழத்துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் வைத்து, மேலே சிறிது எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
இதை அவனில் 325f சூட்டில் 8-10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். சுவையான ஹனி பேக்டு பனானா தயார். சாக்லேட் சிப்ஸுடன் சாப்பிட குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பிடித்த வகை சாக்லேட்ஸ், மர்ஸ்மெல்லொஸ், சாக்கோ பட்டர், பீநட் பட்டர் இவற்றில் ஒன்றை வைத்து டாப்பிங் செய்து கொடுக்கலாம்.
மற்றொரு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி, தேனில் பிரட்டி சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து வைக்கவும்.
அந்த பழத்தை சீரியல்ஸில் பிரட்டி எடுத்து, அவனில் 325 f சூட்டில் 12-15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுவையான க்ரஞ்சி ஹனி பேக்டு பனானா தயார். ட்ரை ஃப்ரூட்ஸ் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

ஜிலேபி - JILEBI







தேவையான பொருட்கள்:


  • மைதா மாவு - ஒரு கப்
  • பட்டை - ஒரு துண்டு
  • ஏலக்காய் - 2
  • ரோஸ் வாட்டர் - சிறிது
  • பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
  • ஃபுட் கலர் - சில துளிகள்
  • சர்க்கரை - 2 கப்
  • எண்ணெய் - பொரிக்க
 செய்முறை:  

மைதா மாவுடன் ஃபுட் கலர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து தேவையான நீர் விட்டு (கெட்டியாகவோ, அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) கலந்து 4 மணி நேரம் வைக்கவும். புளித்த பின் மாவின் பதத்தை சரிபார்க்கவும். பிழிந்து விடும் பதத்தில் இருக்கவேண்டும்.
மாவு புளித்த பின் ஒரு கெட்சப் பாட்டிலில் ஊற்றியோ அல்லது ஒரு ஜிப் லாக் பேக்கில் ஊற்றியோ தயாராக வைக்கவும். சுகர் சிரப் செய்ய ஒரு கப் நீர் விட்டு சர்க்கரை சேர்த்து ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வந்ததும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் ஜிலேபியாக பிழியவும். முக்கியமாக எண்ணெயின் சூடு, சிறிது மாவை விட்டதும் மேல் எழும்பி வரும் பதத்தில் இருக்கவேண்டும். அதிக சூடாக இருந்தாலோ, சூடு குறைவாக இருந்தாலோ ஜிலேபி ஜிலேபியாக வராது.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட்டு சூடான சிரப்பில் போடவும்.

சீஸ் ஃபிங்கர் சான்ட்விச்சஸ் - CHEESE FINGER SANDWICHES






தேவையான பொருட்கள்:

  • ப்ரெட் - 12 முத‌ல் 14
  • க்ரீம் சீஸ் - ஒரு பாக்ஸ் (8 oz)
  • மயோனைஸ் - கால் கப்
  • க்ரஷ்டு பைனாப்பிள் டின் - ஒன்று
  • புதினா இலை - ‍ சிறிது
 செய்முறை:  

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். க்ரீம் சீஸை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும்.
பைனாப்பிள் டின்னை திறந்து, தேவையான அளவு பழத்துண்டுகளை எடுத்து, ஒரு வடிக்கட்டியில் போட்டு, அதில் இருக்கும் நீரை/பழச்சாறை நன்கு வடியவிடவும். (தேவையெனில் லேசாக அழுத்தம் கொடுத்து வடித்து எடுத்தால், பிறகு சீஸ் கலவை நீர்த்து போகாமல் இருக்க உதவும்). புதினா இலைகளை கழுவி நன்றாக துடைத்து, மெல்லியதாக வெட்டி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் க்ரீம் சீஸுடன் மயோனைஸ் போட்டு, நன்றாக குழைத்து, அதை இரண்டு கிண்ணங்களுக்கு மாற்றவும். அதில் ஒரு கிண்ணத்தில், பைனாப்பிள் துண்டுகளையும், மற்றொரு கிண்ணத்தில், புதினா இலைகளையும் சேர்க்கவும்.
பின்னர் அவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு ப்ரெட் துண்டுகளின் ஓரத்தை நறுக்கிவிட்டு, இந்த ஃபில்லிங்கை வைத்து நிரப்பி, மேலே மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும். விருப்பமான வடிவங்களில் நறுக்கி பரிமாறவும்.
சுவையான, மிக சுலபமான, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஈசி க்ரீம் சீஸ் ஃபிங்கர் சான்ட்விச்சஸ் ரெடி. இதை மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். சிறு துண்டுகளாக நறுக்கி, பார்ட்டிகளுக்கு நல்ல ஸ்டார்டராக கொடுக்கலாம்.

சீஸ் ஸ்டஃப்ட் பூரி - CHEESE STUFFED POORI





தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு - அரை கப்
  • துருவிய சீஸ் - 2 தேக்கரண்டி
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை: 

மைதாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவை போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை வட்ட வடிவில் அப்பளங்களாக திரட்டிக் கொள்ளவும்.
சீஸ் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து வைக்கவும்.
திரட்டிய அப்பளத்தை அரை வட்ட வடிவில் பாதியாக கத்தியால் வெட்டி ஒரு பக்கத்தில் சீஸ் ஸ்டஃபிங் வைக்கவும்
மறுபக்கத்தால் மூடிவிட்டு ஓரங்களை ஒரு ஃபோர்க்கினால் அழுத்தி விடவும்.
பூரிகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டஃப்ட் பூரி தயார். இதனுள்ளே சீஸ் மற்றும் சர்க்கரை இரண்டும் உருகி கலந்திருப்பது நல்ல சுவையாக இருக்கும்.

Friday, November 25, 2016

பர்மிஸ் கோகனட் ரைஸ் - PARMIS COCONUT RISE






தேவையான பொருட்கள்:

  • அரிசி - 2 கப்
  • தேங்காய்ப் பால் - 4 கப்
  • நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 3
  • கிராம்பு - 3
  • ஏலக்காய் - 2
  • பிரியாணி இலை - ஒன்று
  • பட்டை - ஒன்று
  • பூண்டு - 3
  • புதினா - சிறிது
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
  • முந்திரி - 5
  • நெய் - 5 தேக்கரண்டி
  • எண்ணெய்
  • உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:  

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, சோம்பு, இஞ்சி விழுது மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் புதினாவைச் சேர்த்து, அரிசியைக் களைந்துப் போட்டு லேசாக வதக்கவும்.
பிறகு தேங்காய்ப் பால் (2 கப் அரிசிக்கு, 4 கப் தேங்காய்ப் பால்,) மற்றும் உப்பு போட்டு, ஒரு விசில் வரவிட்டு அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும் முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
டேஸ்டி பர்மிஸ் கோகனட் ரைஸ் ரெடி.

டொமேட்டோ பேசில் சூப் - TOMATO BASIL SOUP







தேவையான பொருட்கள்:

  • தக்காளி - 300 கிராம்
  • பூண்டு - 5 பற்கள்
  • வெங்காயத் தாள் - 2
  • ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
  • சத்து மாவு பொடி - 2 தேக்கரண்டி
  • பால் - தேவைக்கேற்ப
  • உப்பு - தேவைக்கேற்ப
  • வெங்காயம் - பாதி
  • எண்ணெய், நெய் - தாளிக்க
  • பேசில் இலை - 6
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:  

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். தக்காளி, பூண்டு, வெங்காயம், வெங்காயத் தாள், பேசில் இலை ஆகியவற்றைக் கழுவிவிட்டு நறுக்கிக் கொள்ளவும். சத்து மாவில் சூடான பால் விட்டு கரைத்து மூடி வைக்கவும்
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், வெங்காயத் தாள், பூண்டு, தக்காளி மற்றும் பேசில் இலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்ததும் ப்ளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டி, அத்துடன் சத்து மாவுக் கலவையைக் கலந்து வேகவிட்டு இறக்கவும்.
ஹெல்தி & டேஸ்டி டொமேட்டோ பேசில் சூப் ரெடி. சீஸ் / பேசில் இலை / ப்ரெட் துண்டுகள், மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்

ப்ரோக்கலி லெமன் வறுவல் - BROCCOLI LEMON FRY







தேவையான பொருட்கள்:

  • ப்ரோக்கலி - ஒன்று (சிறியது)
  • பூண்டு - 2 பற்கள்
  • ஆலிவ் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
  • எலுமிச்சை பழம்
  • மிளகு - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
 செய்முறை: 

ப்ரோக்கலித் தண்டின் மேலுள்ள தடித்த பாகத்தை நீக்கிவிட்டு, சிறு பூக்களாக எடுத்து வைக்கவும்.
எலுமிச்சையின் மேல் தோலை (ஜெஸ்ட்) ஒரு கரண்டியால் சுரண்டி எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பூண்டைச் சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
அத்துடன் ப்ரோக்கலியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
கடைசியாக உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் ஜெஸ்ட் சேர்த்து இறக்கவும்.
சத்துக்கள் நிறைந்த, சுவையான ப்ரோக்கலி லெமன் வறுவல் தயார்.

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget