ப்ரோக்கலி சாலட்

தேவையான பொருட்கள்:
- ப்ரோக்கலி - ஒன்று
- ஆலிவ் ஆயில் - 2 மேசைக்கரண்டி
- மிளகாய் ஃப்ளேக்ஸ் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- சீஸ் - கால் கப்
- மிளகுத் தூள்
செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

ப்ரோக்கலியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காம்பு பகுதியையும் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் ஃப்ளேக்ஸைப் போட்டு வதக்கவும்.

பிறகு ப்ரோக்கலி துண்டுகளைப் போட்டு வதக்கி, உப்பு மற்றும் மிளகுத் தூளைப் போட்டு பிரட்டி மூடி வைத்து 4 - 6 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

சுவையான ப்ரோக்கலி சாலட் தயார். சீஸ் தூவிப் பரிமாறவும்

0 comments:
Post a Comment