தேவையான பொருட்கள்:
- - 100 கிராம்
- உருளைக்கிழங்கு - ஒன்று
- தேங்காய்த் துருவல் - அரை கப்
- சின்ன வெங்காயம் - 10
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 5
- தனியா - 3 தேக்கரண்டி
- பூண்டு - 6 பற்கள்
- கறிவேப்பிலை - 3 கொத்து
- நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
- புளி - எலுமிச்சை அளவு
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க :
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
- மெல்லியதாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- செய்யும் முறை:

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 5 சின்ன வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். (உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோலுடன் சேர்ப்பது நல்லது. அதிலுள்ள உள்ள வாயு குறையும்).

அதனுடன் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.

மற்றொரு வாணலியில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, மிளகைப் போட்டு வெடிக்கவிடவும். மிளகு வெடித்ததும் மிளகாய் வற்றல், தனியா, கறிவேப்பிலை, 5 சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். வதக்கியவற்றை தண்ணீர் ஊற்றி மையாக அரைக்கவும்.

காய் வெந்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும். நன்றாக கொதித்ததும் மூடி வைத்து குறைந்த தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து, தீயலில் சேர்க்கவும்.

சுவையான தீயல் தயார். சாதத்துடனும், இட்லி, தோசையுடனும் சாப்பிடச் சுவையாக இருக்கும்

0 comments:
Post a Comment