சேலம் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- வெங்காயம் - கால் கிலோ
- தக்காளி - 3
- இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
- கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
- மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
- சீரகம் தூள் - 2 தேக்கரண்டி
- சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
- கலந்த மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி + அரை மேசைக்கரண்டி
- எண்ணெய் - கால் கப்
- எலுமிச்சை - அரை மூடி
செய்முறை:
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து நறுக்கின இஞ்சித் துண்டுகளுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
நறுக்கியவற்றில் பாதியளவு வெங்காயம், தக்காளி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, விழுதாக வைத்துக் கொள்ளவும்.
சிக்கனை கழுவி சுத்தம் செய்து ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய சிக்கனை மீண்டும் கழுவி எடுத்து, தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கரம் மசாலா தூள் போட்டு அதனுடன் மீதமுள்ள வெங்காயம் போட்டு மூன்று நிமிடம் வதக்கவும். கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
பிறகு சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டவும். சிக்கன் துண்டுகள் வதங்கியதும் அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை முதலில் சேர்க்க வேண்டாம்.
அதன் பிறகு அரை தேக்கரண்டி மஞ்சள் துள், மிளகுத் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், மிளகாய்த் தூள், உப்பு போட்டு ஒரு நிமிடம் கிளறி விடவும்.
சிக்கன் மசாலாவுடன் சேர்ந்து வெந்த பிறகு, அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து. திக்கான குழம்பு பதத்திற்கு வரும். சப்பாத்தி போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள கெட்டியான கிரேவி தேவை என்பவர்கள் இந்த பதத்திலேயே மேலும் 10 நிமிடங்கள் வேக வைத்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். தேவையெனில் சிறிது தேங்காய்ப் பால் ஊற்றியும் வேகவிடலாம்.
குழம்பாக வேண்டுமெனில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தை மூடி வைத்து சுமார் 15 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் மூடியைத் திறந்து, வெந்தது பார்த்து மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.
இதோ சுவையான சேலம் சிக்கன் குழம்பு ரெடி! செய்து, சுவைத்து பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

0 comments:
Post a Comment