EGG GRAVY
1 -முதலில் முட்டையை உடைத்து ஓர் வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் உப்பு தூள் மஞ்சள் தூள் கலந்து ,, எக் கடையும் மிஷின் இருந்தால் அதில் அல்லது கரண்டியாலே நன்கு அடித்து கலக்கவும் , பிறகு அதை ஓர் தட்டில் சுற்றுலும் நெய் தடவி அதில் ஊற்றவும்
அதனை இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக விடவும் ,,,, பிறகு ஓர் கத்தியை வைத்து நைசாக அதை தட்டிலிருந்து எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , ..
தேவையானவை :
முட்டை_8
சி. வெங்காயம்_ 15
குடை மிளகாய் - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 3 நன்கு பழுத்த து
மல்லி புதினா தழை - தேவைக்கு
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மிளகு சீரக பவுடர் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
நெய் - 50ml
உப்பு தேவைக்கு
முட்டை_8
சி. வெங்காயம்_ 15
குடை மிளகாய் - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 3 நன்கு பழுத்த து
மல்லி புதினா தழை - தேவைக்கு
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மிளகு சீரக பவுடர் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
நெய் - 50ml
உப்பு தேவைக்கு
செய்முறை:
1 -முதலில் முட்டையை உடைத்து ஓர் வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் உப்பு தூள் மஞ்சள் தூள் கலந்து ,, எக் கடையும் மிஷின் இருந்தால் அதில் அல்லது கரண்டியாலே நன்கு அடித்து கலக்கவும் , பிறகு அதை ஓர் தட்டில் சுற்றுலும் நெய் தடவி அதில் ஊற்றவும்
அதனை இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக விடவும் ,,,, பிறகு ஓர் கத்தியை வைத்து நைசாக அதை தட்டிலிருந்து எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , ..
2,, தக்காளியை வெந்நீரில் போட்டு 3 நிமிடம் கழித்து எடுத்து தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொளவும் ,,,. வெங்காயம் குடைமிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்
3. அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி அதில் முதலில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கி பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் பிறகு குடைமிளகாய் போட்டு வதங்கியவுடன் ,, மிளகாய் தூள்., கரம் மசாலா தூள் போட்டு வதக்கி .. அரைத்ததக்காளியையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி உப்பு சேர்த்து சிறிது நீர் தெளி்த்து வேக வைத்து .,, நெய் பிரிந்து வரும் வேளையில் கட் செய்த முட்டையை இறக்கி மிளகு சீரக பொடி, புதினா மல்லி இழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி .
5 நிமிடம் வைத்து இறக்கி விடவும்
5 நிமிடம் வைத்து இறக்கி விடவும்

0 comments:
Post a Comment