இறால் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
- இறாலில் பிரட்ட:
- இறால் - 15 (பெரியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
- உப்பு - அரைத் தேக்கரண்டி (தேவைக்கு)
- காஷ்மீரில் சில்லி பொடி - கால் தேக்கரண்டி
- எலுமிச்சைச்சாறு - கால் தேக்கரண்டி
- பஜ்ஜி மாவிற்கு:
- கடலை மாவு - ஒரு கப்
- முட்டை - ஒன்று
- காஷ்மீரில் சில்லி பொடி - கால் தேக்கரண்டி
- சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
- ரெட் கலர் பொடி - கால் தேக்கரண்டி
- உப்பு - அரைத்தேக்கரண்டி (தேவைக்கு)
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
- இறாலை சுத்தம் செய்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து நன்கு கழுவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்.
- முட்டையில் காஷ்மீரி சில்லி, உப்பு, இறாலில் போட்டு பிரட்ட வேண்டிய மசாலாவை போட்டு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
- பஜ்ஜிமாவில் கலக்க வேண்டியவைகளையும் கலக்கி ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்
- பிறகு எண்ணெயை சூடாக்கி தீயை மீதமாக வைத்து ஒவ்வொரு இறாலாக முக்கி எடுக்கவும்.
- முட்டை சேர்ப்பதால் நல்ல பொங்கி வரும். இதே போல் சிக்கனிலும் செய்யலாம்.

0 comments:
Post a Comment