சட்னி மீன் சாப்ஸ்

தேவையான பொருட்கள்:
- பொரிச்ச மீன் - 2 துண்டுகள்
- தக்காளி - 2
- வெங்காயம் - 2
- முழு பூண்டு - 2
- வரமிளகாய் - 2
- தாளிக்க:
- கடுகு, உளுந்து, கடலைபருப்பு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
- பூண்டு - 4 பல்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- வெங்காயம் - ஒன்று
செய்முறை:
தக்காளியை நான்காக நறுக்கவும். வெங்காயத்தை நடுத்தரமாக நறுக்கவும். பூண்டுகளை தோல் நீக்கி வைக்கவும்.
சிறிது எண்ணெயில் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி, வரமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்து வதங்கியதும் இறக்கி ஆற விடவும்.
பின்னர் மைபோல் அரைக்கவும்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
அதில் பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் சட்னியை சேர்த்து 2 மீனிலும் மசாலா இறங்கும் வரை (2 நிமிடங்கள் போதுமானது) வைத்திருந்து பின் இறக்கவும்.
சட்னி மீன் சாப்ஸ் தயார். சாத வகைகளுக்கு பொருந்தும். மழைக்காலங்களில் மழையை ரசித்துக்கொண்டே வெறுமனே சாப்பிட அருமையாக இருக்கும்.
இந்த சட்னியை இட்லி தோசைக்கும் சேர்த்து சாப்பிடலாம்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து மீனுக்கு பதில் சாதம் கொட்டி அத்துடன் சட்னியும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கினால் சட்னி சாதம் தயார்.

0 comments:
Post a Comment