ஆந்திரா ஸ்பைசி சிக்கன்
தேவையான பொருட்கள்:
- எலும்பில்லா சிக்கன் - ஒரு கிலோ
- வெங்காயம் - 4
- இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
- தனியா தூள் - 2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிக்கனை போட்டு வதக்கவும்.
சிக்கன் சிறிது வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
சிக்கன் பாதி வெந்ததும் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு மீண்டும் வதக்கவும்.
சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை போட்டு மேலும் நன்கு வதக்கவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் அதில் தனியா தூள், கரம் மசாலா போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு சிக்கனில் கொத்தமல்லி இலை தூவவும்.
சுவையான ஆந்திரா ஸ்பைஸி சிக்கன் ப்ரை ரெடி.

0 comments:
Post a Comment