மஞ்சள் ஆப்பம்
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - 2 டம்ளர்
- பழைய சாதம் - 1/2 கப்
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- சமையல் சோடா - 1பின்ச்
- உப்பு - சுவைக்கு
- தேங்காய் - 1
- வெங்காயம் - 1 (சிறிது)
- பச்சைமிளகாய் - 3
- முருங்கை இலை - 1கைப்பிடி அளவு
- சோம்பு - 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- முட்டை - 1
- நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- அரிசி, வெந்தயம் இரண்டையும் முதல் நாளே ஊற விடவும்.
- மறுநாள் சாதத்துடன் அரிசியையும் சேர்த்து கெட்டியாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- தேங்காயுடன், சோம்பு சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுத்துக்கொள்ளவும்.
- இத்துடன், அடித்த முட்டை, உருக்கிய நெய், சோடா, உப்பு, முருங்கை இலை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- மாவு, தோசை மாவு பதத்திற்கும் சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
- ஆப்பசட்டியை அடுப்பில் வைத்து, சூடேறியதும், ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து ஆப்பம் வார்க்கவும்.
- இத்துடன் தேங்காய்ப்பால், மீன், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, வெஜ் குருமா அனைத்துக்கும் ஏற்றது.

0 comments:
Post a Comment