மைதா கச்சாயம்

தேவையான பொருட்கள்:
- மைதா- 1/2 கிலோ,
- ரவை - 1/4 கிலோ,
- வெல்லம் - 3/4 கிலோ,
- ஏலக்காய் - 5,
- எள்ளு - 1 ஸ்பூன்,
- பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்,
- தேங்காய் - 1/2 மூடி,
- எண்ணெய் - சுடுவதற்கு.
செய்முறை:
- ரவை, மைதாவை கலந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பொட்டுக்கடலையை ஒன்று இரண்டாக பொடிக்கவும்.
- எள்ளை கழுவி தோலை தேய்த்து எடுக்கவும்.
- ஏலக்காயை பொடி செய்யவும்.
- தேங்காயை துருவி வாசம் வரும் வரை வறுக்கவும்.
- வெல்லத்தை தட்டி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடி கட்டவும்.
- ஊற வைத்த மாவுடன் ஏலக்காய், எள்ளு, பொட்டுக்கடலை, தேங்காய், வெல்ல கரைசல்சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சின்ன கரண்டியில் மொண்டு ஊற்றி, மேலெழும்பி வந்தவுடன், திருப்பி வேக விட்டு எடுக்கவும்.

0 comments:
Post a Comment