பஷி ரிஹா (Bashi Riha)
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் (பஷி) - 1/4 கிலோ
- 2. வெங்காயம் - 1
- 3. ஸ்மோக்டு டூனா மீன் துண்டுகள் - சிறிது (விரும்பினால்)
- 4. பூண்டு - 4 பல்
- 5. முதல் தேங்காய் பால் - 1/2 கப்
- 6. இரண்டாவது தேங்காய் பால் - 1 கப்
- 7. உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய்
- 8. மிளகாய் + தனியா தூள் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை:
- கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கறீவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் கத்தரிக்காய், மீன், தூள் வகை சேர்த்து பிரட்டி இரண்டாவது தேங்காய் பால் விட்டு மூடி வேக விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்து சற்று கெட்டியாக துவங்கியதும் முதல் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
- சுவையான பஷி ரிஹா தயார்.

0 comments:
Post a Comment