டால்மா
தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு - அரை கப்
- பச்சை பருப்பு - அரை கப்
- மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
- பூண்டு - 2
- பரங்கிக்காய் - ஒரு துண்டு
- வாழைக்காய் - அரை துண்டு
- காரட் - 3
- உருளைக்கிழங்கு - ஒன்று
- கத்தரிக்காய் - 2
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - 2
- வெங்காயத்தாள் - 2
- தாளிக்க :
- கடுகு, சோம்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பில்லை, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- கொத்தமல்லி - சிறிதளவு
- வறுத்து அரைக்க:
- கடுகு - அரை தேக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- உளுந்து - ஒரு தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
- வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- தனியா - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
துவரம் பருப்பு, பச்சை பருப்பு இவற்றுடன் பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
பின்பு வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து பிறகு மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும் அதனை வேக வைத்த பருப்புடன் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து காய்களோடு சேர்க்கவும். அதனுடன் உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்க்கவும்.
பிறகு குழம்பை மூன்று கொதி கொதிக்க வைத்து இறக்கவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும். சுவையான டால்மா ரெடி.

0 comments:
Post a Comment