கார கச்சாயம்

தேவையான பொருட்கள்:
- மைதா - 2 டம்ளர்,
- ரவை - 1 டம்ளர்,
- சின்ன வெங்காயம் - 10,
- பச்சை மிளகாய் - 3,
- கறிவேப்பிலை - 10,
- கொத்தமல்லி - சிறிது,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
- ரவை, மைதாவை 1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
- நறுக்கியவைகளை மாவு கலவையில் சேர்த்து, மாவை தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- வாணலியில் எண்ணெயை காயவைத்து சிறுகரண்டியில் மொண்டு ஊற்றி உப்பி வந்தவுடன், திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

0 comments:
Post a Comment