டோக்ளா
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு - இரண்டு கப்
- சோடா உப்பு - அரை தேக்கரண்டி
- பச்சை மிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க தேவையான பொருட்கள்:
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- புதினா - அவரவர் விருப்பம்
- கொத்தமல்லி தழை - சிறிது
- சாட் மசாலா - 2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - மூன்று
- எண்ணெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கடலை மாவுடன் பச்சை மிளகாய் விழுது, உப்பு, சமையல் சோடா ஆகியவற்றுடன் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் இட்லி வேக வைப்பது போல வேக வைத்துக் கொள்ளவும்.
மாவு நன்கு வெந்ததும் குக்கரில் இருந்து எடுத்து விடவும்.
அவை நன்கு ஆறியவுடன் சிறு சிறு துண்டுகளாக கட் செய்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் வரமிளகாய் போடவும்.
பின் அதில் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி தழை போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள டோக்ளாக்களை அதில் போட்டு நன்கு கிளறவும். பின் அதில் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்து பின் அடுப்பை அணைக்கவும்.
சுவையான டோக்ளா ரெடி.

0 comments:
Post a Comment