பாதாம் அடை
தேவையான பொருட்கள்:
பாதாம் - 100 கிராம்
முட்டை - 1
சின்ன வெங்காயம் - 75 கிராம்
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு.
முட்டை - 1
சின்ன வெங்காயம் - 75 கிராம்
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாதாமை மிக்சியில் போட்டு பொடி செய்து வறுத்துக் கொள்ளுங்கள்.
அத்துடன் ஒரு முட்டை, வெங்காயம், மிளகாய், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் ரெடி செய்யுங்கள்.
அடுத்து தோசைக் கல்லில் ஊற்றி நன்றாக நெய் விட்டு வேக விட்டு எடுங்கள். 100 கிராம் பாதாமில் மொத்தம் 3 அடைகள் கிடைக்கும்.
அவ்வளவுதான். தொட்டுக்க காரமான தக்காளி அல்லது தேங்காய் சட்னி (இதில் பொரிகடலைக்கு பதில் பாதாம் சேருங்கள்) வைத்துக் கொள்ளுங்கள்.
பாதாம் ஏற்கனவே வறுத்து வைத்து இருந்ததால் இதை செய்ய 15 நிமிடங்களுக்கு மேல் ஆகவில்லை.

0 comments:
Post a Comment