சோள சோறு
தேவையான பொருட்கள்:
- சோளம் - 1 டம்ளர்,
- உப்பு - தேவையான அளவு,
செய்முறை:
- சோளத்தை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
- உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
- 6 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து சோளத்தை போட்டு, கிளறி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- குக்கரில் வைப்பதானால் சோளம், உப்பு போட்டு கலந்த பிறகு, குக்கரில் வைத்து, வெயிட் போட்டு, 3 விசில் வந்த பிறகு, 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- வெந்த பிறகு, எடுத்து கரண்டியாலோ, மத்தாலோ லேசாக மசிக்கவும்.

0 comments:
Post a Comment