அகத்திப்பூ பச்சைக்கூட்டு
தேவையான பொருட்கள்:
- அகத்திப்பூ - 10,
- பாசிப்பருப்பு - 200 கிராம்,
- சிறிய வெங்காயம் - 5,
- தக்காளி - 1,
- பச்சை - 3,
- அரிசி - 2 தேக்கரண்டி,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிது,
- கொத்தமல்லி - சிறிது,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 1 ஸ்பூன்,
- நெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
- அகத்திப்பூவை கழுவி, பச்சைக்கலர் காம்பை எடுத்து விட்டு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
- பாசிப்பருப்பு நன்கு வெந்தவுடன், நறுக்கிய அகத்திப்பூ, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- அரிசியை சிவக்க வறுக்கவும்.
- வறுத்த அரிசி, சீரகம், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- வெந்த அகத்திப்பூவுடன் அரைத்தவைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
- வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் கொட்டி இறக்கவும்.

0 comments:
Post a Comment