சேலம் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
- குழம்பு) மீன் - 1/2 கிலோ,
- சின்ன வெங்காயம் - 10,
- பூண்டு - 8 பல்,
- தக்காளி - 1,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
- வெந்தயம் - 1 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி,
- வதக்கி அரைக்க:-
- ------------------------
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- மிளகு - 1 தேக்கரண்டி,
- சின்ன வெங்காயம் - 15,
- பூண்டு - 10 பல்,
- தக்காளி - 2,
- தேங்காய் துருவல் - 1/4 மூடி,
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
- தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
- தாளிக்க:
- ------------
- கறிவேப்பிலை - சிறிது,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- சீரகம் - 1/4 தேக்கரண்டி,
- வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை:
- மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்.
- வெங்காயம், பூண்டை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
- தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.
- வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் வதக்கி, அத்துடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- அரைத்த விழுதை புளிகரைசலுடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.
- வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.
- மீன் வெந்ததும், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து, குழம்பில் போட்டு இறக்கவும்.
- நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி, அடுப்பில் சூடு பண்ணவும்.
- நன்கு சூடேறியதும் கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும்
- மணமணக்கும் கலர்ஃபுல்லான மீன் குழம்பு தயார்.

0 comments:
Post a Comment