Monday, October 31, 2016


மீன் குருமா - FISH KURMA






தேவையான பொருட்கள்:

1.மீன் -4
2.வெங்காயம் -1
3.எலுமிச்சைசாறு-1tsp
4.இஞ்சி பூண்டு விழுது-1tsp
5.தயிர் -2tsp(தேங்காய் பால் எடுத்து அதில் எலுமிச்சை பிளிந்தால் தயிர் ஆகிவிடும்)
6.மஞ்சள்-1tsp
7.மிளகாய் பொடி-1tsp
8.தனியா-1tsp
9.பச்சைமிளகாய்-2
10.உப்பு



செய்முறை:

1,3,6,7,10 எல்லாம் சேர்த்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.


தாளிப்பு கடுகு, பிரிஞ்சுலை, காஞ்சமிளகாய், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதனுடன் தயிர், கொத்தமல்லி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி கொதிக்கும் போது ஊற வைத்த மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும்.
நாட்டுக்கோழி குழம்பு - CHICKEN KULAMPU





தேவையான பொருட்கள்:


நாட்டுக்கோழி 1 கிலோ
சின்ன வெங்காயம் 15
தக்காளி 2
சீரகம் 1 டீக
மிளகு 1 டீக
இஞ்சி பூண்டு விழுது 1 டேக
தேங்காய் பால் 1 டம்ளர்
பேலியோ மசாலா 4 டேக
உப்பு தேவையான அளவு


தாளிக்க:


 சோம்பு 
கருவேப்பிலை 
கடுகு 
வெண்ணெய்
சின்ன வெங்காயம் 5 நீள வாக்கில் அரிந்தது


செய்முறை:



1. சீரகம் மிளகு எண்ணெய் இல்லாமல் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம் தக்காளி சிறிதளவு வெண்ணெயில் வதக்கி வைத்துக்கொள்ளவும்
3. 1/2 மூடி தேங்காய் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
4 வறுத்த சீரகம் மிளகு ,வதக்கிய சின்ன வெங்காயம் தக்காளி ஆற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
5.குக்கரில் வெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை,அரிந்த சின்ன வெங்காயம் போடவும்,வெங்காயம் நன்றாக வதக்கியதும் கோழிக்கறி , தேவையான உப்பு போட்டு வதக்கவும்
6. அரைத்த கலவை , இஞ்சி பூண்டு விழுது,பேலியோ மசாலா போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
7.குக்கரை மூடி 4 விசில் வைத்து இறக்கும்
8 கடைசியாக தேங்காய் பால் ஊற்றவும்.
EGG GRAVY






தேவையானவை :
முட்டை_8
சி. வெங்காயம்_ 15
குடை மிளகாய் - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 3 நன்கு பழுத்த து
மல்லி புதினா தழை - தேவைக்கு
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மிளகு சீரக பவுடர் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
நெய் - 50ml
உப்பு தேவைக்கு


செய்முறை:


1 -முதலில் முட்டையை உடைத்து ஓர் வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் உப்பு தூள் மஞ்சள் தூள் கலந்து ,, எக் கடையும் மிஷின் இருந்தால் அதில் அல்லது கரண்டியாலே நன்கு அடித்து கலக்கவும் , பிறகு அதை ஓர் தட்டில் சுற்றுலும் நெய் தடவி அதில் ஊற்றவும்
அதனை இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக விடவும் ,,,, பிறகு ஓர் கத்தியை வைத்து நைசாக அதை தட்டிலிருந்து எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , ..
2,, தக்காளியை வெந்நீரில் போட்டு 3 நிமிடம் கழித்து எடுத்து தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொளவும் ,,,. வெங்காயம் குடைமிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்
3. அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி அதில் முதலில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கி பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் பிறகு குடைமிளகாய் போட்டு வதங்கியவுடன் ,, மிளகாய் தூள்., கரம் மசாலா தூள் போட்டு வதக்கி .. அரைத்ததக்காளியையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி உப்பு சேர்த்து சிறிது நீர் தெளி்த்து வேக வைத்து .,, நெய் பிரிந்து வரும் வேளையில் கட் செய்த முட்டையை இறக்கி மிளகு சீரக பொடி, புதினா மல்லி இழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி .
5 நிமிடம் வைத்து இறக்கி விடவும்

Wednesday, October 26, 2016

வாழைத்தண்டு கறிமசாலா






தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு 1 சிறியது
வெங்காயம் 1
கறிமசாலா 1 டேக
மஞ்சள் தூள் 1/2 டீக
மிளகாய் வத்தல் 2
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை சிறிதளவு
தாளிக்க கடுகு சோம்பு நல்லெண்ணெய்.


செய் முறை
:
ஒரு வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை , மிளகாய் வத்தல் போட்டு தாளித்து, பொடியாக வெட்டிய தண்டு,கறிமசாலா,ம மஞ்சள் தூள் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.நீர் வற்றும் வரை வதக்கினால் கமகம வாழைத்தண்டு கறிமசாலா ரெடி.
வாழைப்பூ வடை


வாழைப்பூ வடை:




தேவையான பொருட்கள்:


வாழைப்பூ 1
ஆளி விதை 3 டேக
சின்ன வெங்காயம் 10
இஞ்சி பூண்டு விழுது 1 டீக
கரம்மசாலா 1டீக
மஞ்சள் தூள் 1/2 டீக
உப்பு தேவையான அளவு
சீரகம் 1/2 டீக
சோம்பு 1/2 டீக
கொத்தமல்லி சிறிதளவு


செய்முறை:


வாழைப்பூவை சுத்தம் செய்து நன்றாக கழுவி விடவேண்டும்.ஆளிவிதையை மிக்சியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.வாழைப்பூ,சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்,பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த ஆளி விதை,அரைத்த வாழைப்பூ,சின்ன வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,சோம்பு,கொத்தமல்லி(சிறிதாக அரிந்து கொள்ளவும்), உப்பு தேவையான அளவு,மஞ்சள்தூள்,கரம்மசாலா அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவுமதண்ணீர் சேர்க்க வேண்டாங்க.வாழைப்பூவு நீரே போதும் தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி கலவையை வடை தட்டுவதை போல் தட்டி நடுவில் ஒரு ஓட்டை போடவும்.மிதமான தீயீல் வைத்து வேக விடவும்.நன்றாக வெந்ததும் திருப்பி போடவும்.சுவையான வாழைப்பூ வடை ரெடி.




Drumstick Soup Recipe




1.Drumstick - 2
2.Oinion - 1
3.Green chilli - 1
4. Butter - 2 tablespoon
5. Milk - 1 cup
6.salt - a pinch



Method:-

Take a pressure cooker add a butter, saute with onions, greenchilli, drumsticks and a salt later with cup of water and give 2 whistle. Later add the ingredients in the jar with the milk grind till its mushy. Then filter it and then ur creamy drumstick soup is ready.



பச்சிலை காய்கறி சாறு





தேவையான பொருட்கள் :


அகத்தி கீரை , முருங்கை கீரை , புளிச்ச கீரை , வெந்தய கீரை , மிளகு தக்காளி கீரை தவிர்த்து எதுவும் எடுக்கலாம்.
கீரை 1 கைப்பிடி
புதினா "
மல்லி. "
கறிவேப்பிலை "
கேரட் 1
வெள்ளரி. 1
தக்காளி. 1
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
பசுமஞ்சள். 1 துண்டு
எழுமிச்சை. 1/2 பழம்
பெ நெல்லிக்காய். 3


செய்முறை:


எழுமிச்சை தவிர்த்து , அனைத்தையும் மண்போக நன்றாக கழுவி சுத்தம் செய்து வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் 10 நிமிடம் அமிழ்த்தி வைக்கவும் ( காட்டம் குறைவதற்கு )
பின்னர் ஜுசரில் போட்டு மை போல் அரைத்து எழுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்..
CHICKEN BURGER






Coconut Powder
 First Coconut Milk
 Baking Powder
 Baking Soda
 cheese Slices
 Chicken Salami / Pork Salami etc
 Any Herbs,cut Onions,Cut Tomatos
 Butter or Ghee for cooking
 Salt ( Optional, if you are using salted cheese no additional salt required )
 1 egg

Method :
In a vessel add Egg,1/2 table spoon of Baking Soda,1/2 table spoon of Baking Powder,2 table spoon of coconut Milk. Whisk it fully. Based on the consistency add coconut powder ( this varies normally 2-3 table spoon of powder is sufficient ).The final consistency should be thicker like OOTHAPPAM Batter. Please note we are trying to get Burger not Dosai. Accordingly add coconut powder.Whisk again , so that there are no lumps.
In a tawa/dosai kaal , add enough of butter and keep it in low heat. later add this batter in a shape of burger bun. let it cook in both the sides. if you want more crispy add little more butter/ghee. Prepare two such burger bun. Now keep stacking one bun , one cheese slice, one salami,one cheese again bun. If you want you can add some veges in between.keep cooking on the both the sides. Take it away and Enjoy.

கருவேப்பிலை புதினா இட்லி





தேவையான பொருட்கள்:🌷

கருவேப்பிலை புதினா ஒரு கப்
பச்சமிளகாய் ஒன்று பெரியது
முட்டை 4
உப்பு தேவைக்கு
தேங்காய் ஒரு கப்
வறுத்த முந்திரி சிறிது
பாதாம் சாப்ரான் பால் கால் கப்

🌿செய்முறை:
🌿
கருவேப்பிலை புதினா பச்சமிளகாய் தேங்காயை முக்கால் பதத்திற்கு அரைக்கவும்
அத்துடன் முட்டை பாதாம் பால் உப்பு சேர்த்து அரைக்கவும்.
இட்லி சட்டியில்ம்நெய் தடவி 7 நிமிடம் அவித்து எடுக்கவும்.
சுவையான கருவேப்பிலை புதினா இட்லி ரெடி
பனீர் பட்டர் மசாலா





தேவையான பொருள்கள் :


1. பனீர் - 200 gms
2. வெங்காயம் - 3
3. தக்காளி - 3
4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
5. மல்லி பொடி -2 tsp
6. மிளகாய் பொடி - 1½ tsp
7. மஞ்சள் பொடி - ½ tsp
8. கரம் மசாலா - 1 tsp ஸ்பூன்
9. வெண்ணை - 30 to 40 gms
10. கஸுர் மேத்தி - சிறிதளவு
11. பட்டை - 2
12. கிராம்பு - 3
13. ஏலக்காய் - 2
14. பிரிஞ்சு இலை - 2
15. சோம்பு - ¼ tsp

செய்முறை:

1. முதலில் பனீர் தயாரித்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
2. இரும்பு சட்டியில் 20 கிராம் வெண்ணை உருகி வந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
3. இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.
4. இதனுடன் தக்காளியும் உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. தக்காளி நன்கு மசிந்ததும் அதனுடன் மல்லி பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
6. நன்கு ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
7. மீதியுள்ள வெண்ணெயை உருக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை, சோம்பு சேர்த்து பொரிந்ததும் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.
8. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வெட்டி வைத்துள்ள பனீர் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
9. இறுதியாக கஸுர் மேத்தியை நன்கு கசக்கி போட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
10. விரும்பினால் 1 ஸ்பூன் வெண்ணெயை மேலே சேர்த்துக்கொள்ளலாம்

Tuesday, October 25, 2016

ஸ்பைஸி பன்னீர் டிக்கா






பன்னீர் 400 கி சதுர வடிவில் வெட்டியதது
இஞ்சி பூண்டு & ப மிளகாய் 1 சேர்த்
அரைத்த விழுது. 1 டீ ஸ்பூன்
குடைமிளகாய் & வெங்காயம் சதுர வடிவில்
வெட்டியது தேவைக்கு ..
பேலியோ மசாலா 1 டீ ஸ்பூன்
தயிர் அ யோகர்ட் 2 டீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு
தேங்காய் எண்ணெய் & வெண்ணெய்
தேவைக்கு.


செய்முறை :


வெண்ணெய் தவிர்த்து மற்ற
பொருட்களை ஒன்றாக கலந்து பிசறி
ஒரு மணி நேரம் மூடி வைக்கவும் .
பின்னர் தோசை கல்லில் அ க்ரில் பேனில்
வெண்ணெய் சேர்த்து வாட்டி எடுக்கவும்.
ஸ்பைசி டிக்கா தயார் ,
முட்டைகோஸ் சோம்பு பொரியல்





தேவையான பொருட்கள்:


முட்டை கோஸ் - 100 கிராம்
முட்டைகோஸ் சோம்பு பொரியல்
தேவையான பொருட்கள்


தாளிக்க:


எண்ணை அல்லது பட்டர் - 1 தேக்கரண்டி
சோம்பு + கடுகு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 2 பொடியாக அரிந்தது
பெருங்காயப்பொடி - அரை சிட்டிக்கை
காஞ்ச மிளகாய் - 1
கருவேப்பிலை - 5 இலை
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 தேக்கரண்டி


செய்முறை:


முட்டை கோஸை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை குக்கரில் தாளித்து முட்டை கோஸ் சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி உப்பு ,தேங்காய் துருவல், இரண்டு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
கவனிக்க:
1. தேவைபட்டால் முட்டை மிள்கு சேர்த்து தோசைபோல தயாரித்து இதை உள்ளே ஸ்டப் செய்து சாண்ட்விச் ரோல் போலவும் சாப்பிடலாம்.
2. இல்லை பனீர் ஸ்லைஸை 65 போல தயாரித்து இந்த பொரியலை உள்ளே வைத்து சாண்ட்விச் போலவும் சாப்பிடலாம்.
கிரேவி டைப் மட்டன் சூப்






தேவையான பொருட்கள்:


மட்டன் - 250 கிராம்
தேங்காய் - 1 தே.க.
தனியா - 1 தே.க.
சீரகம் - 1/2 தே.க.
கசகசா - 1/2 தே.க.
பட்டை - 1
கிராம்பு - 2
மிளகு - 1 தே.க.
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 6 பல்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 5
எண்ணை - 1 தே.க.
நெய் - 2 தே.க.
உப்பு
மஞ்சள் தூள்


செய்முறை:


1. தேங்காய் முதல் கறிவேப்பிலை வரை உள்ளவற்றை எண்ணையில்ல வறுத்து அரைக்கவும்.
2. குக்கரில் மட்டன், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் போட்டு, 4 கப் நீர் ஊற்றி 7 விசில் விடவும்.
3. குக்கரை திறந்து சூப் கப்பில் ஊற்றி, மேலே நெய் ஊற்றி பருகவும்.
பாதாம் அடை






தேவையான பொருட்கள்:


பாதாம் - 100 கிராம்
முட்டை - 1
சின்ன வெங்காயம் - 75 கிராம்
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:


பாதாமை மிக்சியில் போட்டு பொடி செய்து வறுத்துக் கொள்ளுங்கள்.
அத்துடன் ஒரு முட்டை, வெங்காயம், மிளகாய், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் ரெடி செய்யுங்கள்.
அடுத்து தோசைக் கல்லில் ஊற்றி நன்றாக நெய் விட்டு வேக விட்டு எடுங்கள். 100 கிராம் பாதாமில் மொத்தம் 3 அடைகள் கிடைக்கும்.
அவ்வளவுதான். தொட்டுக்க காரமான தக்காளி அல்லது தேங்காய் சட்னி (இதில் பொரிகடலைக்கு பதில் பாதாம் சேருங்கள்) வைத்துக் கொள்ளுங்கள்.
பாதாம் ஏற்கனவே வறுத்து வைத்து இருந்ததால் இதை செய்ய 15 நிமிடங்களுக்கு மேல் ஆகவில்லை.
சிறுபாகற்காய் வறுவல்






தேவையான பொருட்கள்:


சிறூபாகற்காய் 1/4 கிலோ
பெருங்காயம் சிறிதளவு
மஞ்சள் 1/2 tsp
மிளகாய்தூள் 1/2 tsp
உப்பு _ தேவையான அளவு
வெங்காயம் 1
பூண்டு 4 பல்
கருவேப்பிலை 1 கைப்பிடி



செய்யும் முறை:



கெட்டியான வடச்சட்டியில் நல்லெண்ணெய் உுற்றி,கடுகு போட்டு தாளித்து பின் மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு அடுப்பை குறைத்து வைத்து வதக்கினால் மொறுமொறு பாகற்காய் ரெடி..


குறிப்பு:

கசப்பு என்று நினைத்தால் எலுமிச்சை சாறு ஊற்றிக் கொள்ளலாம்,பெரிய பாகற்காய் விட இது கசப்பு குறைவு..
ஆட்டுக் கால் பாயா





தேவையான பொருள்கள் : 


1. ஆட்டுக்கால் - 4 no (ஒரு ஆட்டுக்காலாக இருந்தால் மிக நல்லது).
2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
3. கறிவேப்பிலை - கொஞ்சம்
4. கொத்துமல்லி தழை - கொஞ்சம்
5. பெரிய வெங்காயம் - 100 கிராம்
6. தக்காளி - 100 கிராம்
7. கடுகு - கொஞ்சம்
8. வடகம் - கொஞ்சம்
9. ஆப்பிள் சிடர் வினிகர்- 2 ஸ்பூன்
10. தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

வறுத்து அரைக்க :

1. மல்லி - 1 ½ ஸ்பூன்
2. மிளகு - 1 ஸ்பூன்
3. சீரகம் - 1 ஸ்பூன்
4. கிராம்பு - 4
5. பட்டை - 2 (சிறியதாக)
6. காய்ந்த மிளகாய் - 3
7. கசகசா - ½ ஸ்பூன்
மசாலா பொடிகள் :
1. கரம் மசாலா - ½ ஸ்பூன்
2. மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
3. மிளகாய் பொடி - ½ ஸ்பூன்
4. கறி மசால் - ½ ஸ்பூன்
5. உப்பு - தேவைக்கு ஏற்ப


செய்முறை:


1. முதலில் ஆட்டுக் கால்களை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
2. வறுத்து அரைக்க வேண்டிய பொருள்களை வாணலியில் போட்டு சிறிது எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்ஸ்யில் அரைத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் குக்கர் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும்.
4. கடுகு, வடகம் போடவும்.
5. கறிவேப்பிலை போடவும்.
6. வெங்காயம் போடவும்.
7. தக்காளி போடவும்.
8. இஞ்சி பூண்டு விழுது போடவும்.
9. மசாலா பொடிகள் போடவும்.
10. உப்பு சிறிது போடவும்.
11. இன்னொரு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொள்ளவும்.
12. ஆட்டுக் கால்களை போடவும்.
13. நன்கு கலந்து கொள்ளவும்.
14. அரைத்து வைத்த மசாலா பொடிகளை போட்டு கலந்து விடவும்.
15. இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரின் முக்கால் பாகம் வெந்நீர் சேர்க்கவும்.(அப்போது தான் சீக்கிரம் கொதி வரும்).
16. கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
17. ஆப்பிள் சைடர் வினிகர் சேர்க்கவும். (அப்போது தான் எலும்பில் உள்ள சத்துக்கள் சூப்பில் இறங்கும்)
18. குறைந்தது 20 – 25 வரை விசில் விடவும்.
19. முடிந்ததும அடுப்பை அனைத்து குக்கரை சிறிது ஆற விடவும்.
ஆட்டுக்கால் பாயா தயார்.
சூடாக பரிமாறவும்.
சுக்கா வறுவல்





தேவையான பொருட்கள்:


ஆட்டு ஈரல்,இதயம்,சுவரொட்டி,நுரையீரல்,சிறுகுடல்_1 கிலோ
தக்காளி 1
வெங்காயம் சிறியது10
பூண்டு 10 பல்
இஞ்சி சிறிதளவு
மஞ்சள் 1/2 tsp
மிளகாய்தூள் 1/2 tsp
சீரகம் 1 tsp
மிளகு1 tsp
உப்பு தேவையான அளவு


செய்முறை:


1சிறுகுடலை மட்டும் நன்றாக கழுவி உப்பு,மஞ்சள்தூள் போட்டு குக்கரில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைத்து3 விசில் விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்
2 பூண்டு,இஞ்சி,சீரகம் ,மிளகு மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும்,
3 வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு சோம்பு , கருவேப்பிலை போட்டு தாளித்து,பிறகு வெங்காயம் , தக்காளிவதக்கி பின்னர் ஈரல்,இதயம்,சுவரொட்டி,நுரையீரல் , வேகவைத்த சிறுகுடல் போடவும்.உப்பு தேவையான அளவு போட்டு சிறிது நேரம் வதக்கினால் போதும்.குடல் தவிர மற்ற அனைத்தும் சீக்கீரம் வெந்து விடும்..அதிக நேரம் வதக்கினால் ரப்பர் மாதிரி ஆகிவிடும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்,குடல் வேகவைத்த தண்ணீர் போதும்.
சுவையான வறுவல் ரெடி..
கறி வறுவல்




தேவையான பொருட்கள்:


1 மட்டன் 1/2 கிலோ
2 சின்ன வெங்காயம் 15
3 தேங்காய் துருவல் 1/4 கப்
4 மிளகு 1 ஸ்பூன்
5 சீரகம் 1ஸ்பூன்
6 சோம்பு 1ஸ்பூன்
7 பூண்டு 1
8 இஞ்சி சிறு துண்டு
9 மிளகாய் பொடி 1 ஸ்பூன்
10 தனியா பொடி 1 1/2ஸ்பூன்
11 மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
12 கரம் மசாலா 1/4ஸ்பூன்
13 தக்காளி 2


தாளிக்க தேவையானவை


தேங்காய் எண்ணெய். சோம்பு,பட்டை,
கறிவேப்பிலை,


செய்முறை:


3ல் இருந்து 8வரை உள்ள பொருட்களை வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
குக்கரில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்தும் வெங்காயம் போட்டு வதக்கவேண்டும்.
தக்காளி,மட்டன்,அரைத்த விழுது,மிளகாய்,தனியா,கரம் மசாலா,மஞ்சள் பொடிகளை போட்டு கிளற வேண்டும்.
தேவைக்கு ஏற்ப உப்பு , 1/4கப் தண்ணீர் விட்டுமூடி 3 விசில் வரும் வரை சிறு தீயில் வேகவிடவேண்டும்.
இரும்பு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பட்டை ,சோம்பு போட்டு தாளித்து மட்டனை அதில் கொட்டி நீர் வற்றும் வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.
சுவையான சூப்







பூண்டு, இஞ்சி , பச்சைமிளகாய் அரைத்துக்கொள்ள வேண்டும்.
முழு தக்காளி, நறுக்கிய கேரட் வேக வைக்க வேண்டும். தக்காளியை தோல் நீக்கி அரைத்து வைக்க வேண்டும்.
சட்டியில் கடுகு தாளித்து, இஞ்சி, பூண்டு, ப.மி விழுதை நன்றாக வதக்கி, சீரகப்பொடி போட்டு, தக்காளி விழுது போட்டு கொதிக்கவைத்து, கூடவே வெந்தக் கேரட்டுகளையும் போட்டு கடைசியில் தேங்காய் பால் பிழிந்து, கொத்தமல்லி தூவினால் சூடான சுவையான சூப் தயார்.
Mutton Chops






தேவையான பொருட்கள்:


மட்டன் - 250 கிராம்
தேங்காய் - 1 மே.க.
முந்திரி - 3
தனியா - 1 தே.க.
சோம்பு - 1 தே.க.
கசகசா - 1 தே.க.
மிளகு - 1 தே.க.
பட்டை - 1
கிராம்பு - 4
இஞ்சி - 1
பூண்டு - 10
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 3+10
தக்காளி - 1
எண்ணை - 2 மே.க.
கடுகு - 1 தே.க.
கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு


செய்முறை:


1. தேங்காய் முதல் சின்ன வெங்காயம் 3 வரை உள்ள பொருட்களை அரைக்கவும்.
2. மட்டனை குக்கரில் 6 விசில் விட்டு வேக வைக்கவும்.
3. இரும்பு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு 10 வெங்காயம், தக்காளி, மட்டன், உப்பு, அரைத்த மசாலா ஊற்றி கெட்டியானதும் இறக்கவும். 

முட்டை கொத்துக்கறி குழிபணியாரம்




தேவையான பொருட்கள்:


முட்டை - 4
கொத்துக்கறி - 150 கிராம்
வெங்காயம் - 1/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் பொடி - 1 தே.க.
கரம் மசாலா - 1/2 தே.க.
நெய் - தேவைக்கேற்ப


செய்முறை:


1. பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகாய்பொடி, வெங்காயம் கலந்து தனியே வைக்கவும்.
2. கொத்துக்கறியை கரம் மசாலா, உப்பு , 1/2 கப் நீர் விட்டு குக்கரில் 2 விசில் வைக்கவும்.
3. வெந்த கறியை முட்டையுடன் கலந்து, குழிபணியாரக் கல்லில் நெய் ஊற்றி சுடவும்.
குடமிளகாய் பஜ்ஜி




தேவையான பொருட்கள்:


குடமிளகாய் 1
முட்டை 2
உப்பு தேவையான அளவு
மிளகாய்தூள் 1/2 டீக
வெண்ணெய் தேவையான அளவு



செய்முறை:



குடமிளகாயை சதுர வடிவில் அரிந்து கொள்ளவும்( அப்போ தான் பணியாரக்கல்லில் வேக வைக்க முடியும்).அரிந்த மிளகாயை தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி அதில் சிறிது நேரம் உப்பு போட்டு வதக்கவும்.பின் குடமிளகாயை உப்பு மிளகாய்தூள் கலந்த கலவையில் இடவும்.
ஸ்பூனால் ஒரு ஒரு மிளகாய எடுத்து வெண்ணெய் தடவிய பணியாரக்கல்லில் இடவும். ஸ்பூனால் இடும் போது மிளகாய் நடுவிலும் மேலே கீழே முட்டை கோட்டிங்கும் இருக்கும்.வெண்ணெய் உருகி இதனுடன் கலக்கும் போது மொறுமொறு பஜ்ஜி ரெடி.
தேங்காய் சட்னி அல்லது தாளித்த தயிர் சுவையாக இருக்கும்.
Maintenance diet இருப்பவர்கள் குடமிளகாய் பதில் உருளைக்கிழங்கு ஒன்று சிறியது சேர்த்து கொள்ளலாம்.

Monday, October 24, 2016

EGGPLANT FRY





சீமை கத்தரிக்காய்களை வட்ட வடிவில் வெட்டி சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்து கழுவிக்கொள்ளவும் , நமது பேலியோ ரெடி மிக்ஸ் மசாலாவை காயின் மேல் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு ,
இரண்டு முழுமுட்டைகளை நன்றாக உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும் .
தோசைக்கல்லில் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் , காய் துண்டுகளை முட்டை கலவையில் அமிழ்த்தி எடுத்து கல்லில் போடவும்
மெதுவான தீயில் மேலே மூடி போட்டு திருப்பி போட்டு வேகவிடவும் ..
பின்னர் நமது பட்டர் ரெய்தாவோடு பறிமாறவும் ..
கறி உருண்டை




தேவையான பொருள்கள்:- 


கொத்துக்கறி-1/4 கிலோ
 ஒரு கப்- தேங்காய்
 3- பச்சைமிளகாய்
 3 காய்ந்த மிளகாய்
 பட்டை சிறிதளவு
 கிராம்பு-2 
சீரகம்-1 டிஷ்பூன்
 சோம்பு-1- டிஷ்பூன்
 மிளகு 1/2 - டிஷ்பூன்
சின்ன வெங்காயம் -50- கிராம்
 கறிவேப்பிலை
 உப்பு
கொத்துமல்லிதழை 


செய்முறை:-



முதலில் கொத்துகறியை தனியாக அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு, கொத்துமல்லிதழையை தவிர்த்து மேலே உள்ள அனைத்தயும் தண்ணீர் விடாமல் அரைத்து வைத்து அரைத்து கொள்ளவும.் பிறகு இதனுடன் அரைத்து வைத்த கொத்துகறியைும்,பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை கலந்து, சிறு உருண்டை களாக உருட்டி, கடாயில் சிறிதளவு நல்லெண்னெய் ஊற்றி, மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் ரெடி...!
காடை முட்டை பிரட்டல்



தேவையான பொருள்கள் : 


1. காடை முட்டை - 12
2. கோழி முட்டை - 3
3. தக்காளி - 5 0 கிராம்
4. பெரிய வெங்காயம் - 5 0 கிராம்
5. இஞ்சி பூண்டு கலவை- 1 SPOON
மசாலாவுக்கு :
1. கரம் மசாலா - ½ ஸ்பூன்
2. மிளகாய் பொடி - ½ ஸ்பூன்
3. மல்லி பொடி - ½ ஸ்பூன்
4. கறி மசால் - ½ ஸ்பூன்
5. மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
6. மிளகு தூள் - ½ ஸ்பூன்
7. உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிப்புக்கு:

1. கடுகு - ¼ ஸ்பூன்
2. காய்ந்த வெந்தய கீரை - ¼ ஸ்பூன்
3. வடகம் - கொஞ்சம்.
4. கறிவேப்பிலை - கொஞ்சம்
5. கொத்துமல்லி - கொஞ்சம்


செய்முறை:


1. முட்டைகளை வேகவைத்து ஓடு பிரித்து எடுத்துக்கொள்ளவும். (காடை முட்டை ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்) தண்ணீரில் போட்டு ஓடு பிரிக்கவும்.
2. பாதி பாதியாக முட்டைகளை வெட்டிக்கொள்ளவும். கோழி முட்டைகளை நான்காக வெட்டிக்கொள்ளலாம்.
3. அடுப்பில் இரும்பு சட்டி வைக்கவும்.
4. ஒரு ஸ்பூன் நெய் விடவும்.
5. தாளிப்பு பொருள்களை போடவும்.
6. வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
7. இஞ்சி பூண்டு விழுது போட்டும்.
8. தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
9. சிறிது உப்பு போடவும்.
10. தக்காளி மசித்த பின் மசாலா பொடிகளை போடவும்.
11. சிறிது தண்ணீர் விடவும். தண்ணீர் கொதித்த உடன் கறிவேப்பிலை கொத்துமல்லி போட்டு கலக்கவும்.
12. வெட்டி வைத்த காடை, கோழி முட்டைகளை போட்டு மெதுவாக பிரட்டிவிடவும்.
13. அடுப்பு அணைத்து விடவும்.
காடை முட்டை பிரட்டல் தயார். சூடாக பரிமாறவும்.

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget