தாபா முட்டை சுக்கா

5 முழு முட்டைகள் வேகவைத்து உரித்து முள் கரண்டியில் ஆங்காங்கே குத்தி எடுத்து வைத்து கொள்ளவும் ,
சிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் , தக்காளி , பச்சை மிளகாய் , கறி வேப்பிலை , புதினா தேவைக்கு. இஞ்சி பூண்டு விழுது 1 1/2 தேக்கரண்டி ..
வாணலியை சூடேற்றி , நல்லெண்ணய் அ வெண்ணெய் ஊற்றி சூடேற்றி நறுக்கி வைத்துள்ள தாளித பொருட்களை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் 1 மேசைகரண்டி அளவிற்கு வெந்தயதூள் , சோம்பு தூள் , சீரகதூள் , மிளகு தூள் , மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , பெருங்காயதூள் ( ஒரு பின்ச் ) , உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கப் தயிர் சேர்த்து வதக்கவும் ..
இன்னொரு வாணலியில் வெண்ணெய் போட்டு சூடேறியவுடன் சீரகதூள் , மிளகு தூள் , உப்பு சேர்த்து முட்டைகளை பிரட்டி பிரட்டி சூடேற்றவும் , பொன்னிறம் வந்ததும் மசாலாவோடு எடுத்து கலந்து 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து எடுத்து பரிமாறலாம் ..
டயட் இல்லாதவர்கள் கொஞ்சம் க்ரீம் சேர்த்து கிரேவியாக சப்பாத்தி & தோசைக்கு கொடுக்கலாம்..
முத்து மணியே ! ரத்தினமே ! உன் பொன்னான கையாலே ! முட்டை சுக்கா ஒன்னு போட்டா தா ! அப்படினு உங்காத்துகாரரோ ! ஆத்துகாரம்மாவோ மறுபடியும் செய்து கொடுக்க சொல்லி கேட்டா மறவாமல் இந்த சகோதரியை நினைவில் கொள்ளவும்..

0 comments:
Post a Comment