Tuesday, August 23, 2016

மட்டன் சுக்கா வறுத்த கறி 


தேவையான பொருட்கள் :



மட்டன் ஊற வைக்க
மட்டன் 1/2 கிலோ
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு


சுக்கா சமைக்க :



வெங்காயம் 1 1/2 கப் ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1 கப் ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி 1 இன்ச் ( அம்மி கல்லில் தட்டிக் கொள்ளவும் )
பூண்டு 7 பற்கள் ( அம்மி கல்லில் தட்டிக் கொள்ளவும் )
பட்டை 1 இன்ச்
இலவங்கம் 4
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
மல்லித்தூள் 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை 20
முந்திரி பருப்பு 15
எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
வெண்ணை 1 மேஜைக்கரண்டி
தண்ணீர் 1 கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை :
1. மட்டனை சுத்தம் செய்த பின்னர் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
2. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியையும் , பூண்டையும் நன்கு அம்மி கல்லில் நன்கு நசுக்கி கொள்ளவும்.
3. இலவங்கம், பட்டை, சீரகம், மிளகு, ஏலக்காய் போட்டு நன்றாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
4. இப்பொழுது ஒரு வடசட்டியில் நெய்யை 1 தேக்கரண்டி ஊற்றி அதில் பொடித்த முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். மீதமுள்ள நெய்யில் கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
5. ஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து , பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, பின்னர் பொடித்த வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து 3 விசில் விட்டு கறி நன்றாக வேகும் வரை ( தேவையான விசில் ) இறக்கவும்.
6. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிக் வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பின்பு நசுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூளையும் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
8. இப்பொழுது பிரஷர் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து சிறிதளவு தீயில், குக்கரில் உள்ள மசாலா நீர் சுண்டும் வரை கிளறவும்.
9. மட்டன் கலவையை கொஞ்சம் கெட்டியானதும் அதை வடசட்டியில் உள்ள வெங்காய கலவையில் சேர்க்கவும்.
10. பிறகென்ன மட்டன் மசாலாவில் நன்றாக கலந்து வருமாறு சிறு தீயில் கிளறவும்.
11. இந்த சமயத்துல வெண்ணையை சேர்த்து நன்றாக வறுக்கவும். இந்த நிலையில் மட்டன் கொஞ்சம் கறுத்து , கொஞ்சம் மொறு மொறுப்பு தன்மை வரும் ( இதில் நமது விருப்பதிற்கு ஏற்ப சிவக்க விட்டு வறுத்து எடுக்கவும் ). இடை இடையில் கொஞ்சம் நெய்யை சேர்த்து வறுக்கவும்.
12. இறுதியில் வறுத்த முந்திரிப்பருப்பையும் கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். சுவையான மட்டன் சுக்கா ரெடி.

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget