கோதுமை புட்டு - WHEAT PUTTU
தேவையான பொருட்கள்:
- கோதுமை - ஒரு கப்
- சீனி - அரை கப்
- ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
- நெய் - 50 கிராம்
செய்முறை:
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கோதுமையை நன்றாகச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த கோதுமையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த கோதுமையுடன் லேசாகத் தண்ணீர் தெளித்து பிசையவும்.
அத்துடன் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல், உப்பு சேர்த்து புட்டு குழாயிலிட்டு 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
நல்ல மணமும் சுவையும் நிறைந்த கோதுமை புட்டு தயார். இது ஒரு சத்தான சிற்றுண்டி.


0 comments:
Post a Comment