ஆட்டுக் குடல் கூட்டு - BOTI KOOTTU
தேவையான பொருள்கள் :
குக்கரில் குடல் துண்டுகள் , 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் , தேவைக்கு குடல் துண்டுகள் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும். முதல் இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பைக் குறைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.
ஆவியடங்கியவுடன் திறந்து தண்ணீர் வற்ற வைக்கவும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் அல்லது நெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கவும், இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன் சேர்க்கவும். பச்சை வாடை போக வதக்கவும்.ஒரு தக்காளி,நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும். உப்பு சேர்த்து வதங்க விடவும். அத்துடன்,கரம் மசாலா கால் டீஸ்பூன்,(ஏலம் பட்டை கிராம்புத்தூள்) மிளகாய்த்தூள் 1- 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத்தூள் தலா 1 டீஸ்பூன் சேர்க்கவும். பிரட்டி விடவும். வேக வைத்த குடல் சேர்த்து சுருள வதக்கவும்.உப்பு சரி பார்க்கவும். சிம்மில் மூடி போடவும்.
அடுப்பை அணைக்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி விட்டுப் பறிமாறவும். சும்மாவே சாப்பிடலாம். செமையாக இருக்கும். மசாலா காரம் அவரவர் விருப்பம்.
தேவையான பொருள்கள் :
சுத்தம் செய்த ஆட்டுக் குடல் – மீடியம் சைஸ் – 1
வேக வைக்க –
குக்கரில் குடல் துண்டுகள் , 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் , தேவைக்கு குடல் துண்டுகள் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும். முதல் இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பைக் குறைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.
ஆவியடங்கியவுடன் திறந்து தண்ணீர் வற்ற வைக்கவும்.
குடல் கூட்டு செய்முறை :-
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் அல்லது நெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கவும், இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன் சேர்க்கவும். பச்சை வாடை போக வதக்கவும்.ஒரு தக்காளி,நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும். உப்பு சேர்த்து வதங்க விடவும். அத்துடன்,கரம் மசாலா கால் டீஸ்பூன்,(ஏலம் பட்டை கிராம்புத்தூள்) மிளகாய்த்தூள் 1- 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத்தூள் தலா 1 டீஸ்பூன் சேர்க்கவும். பிரட்டி விடவும். வேக வைத்த குடல் சேர்த்து சுருள வதக்கவும்.உப்பு சரி பார்க்கவும். சிம்மில் மூடி போடவும்.
அடுப்பை அணைக்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி விட்டுப் பறிமாறவும். சும்மாவே சாப்பிடலாம். செமையாக இருக்கும். மசாலா காரம் அவரவர் விருப்பம்.

0 comments:
Post a Comment