பன்னீர் மஷ்ரூம் ஃபிரை - PANEER MUSHROOM
FRY
பன்னீர் 200 கிராம், காளான் ஒரு பாக்கெட் தேவை!
காளானை தோலுரித்து சுத்தம் செய்து நன்கு துண்டுகளாக வெட்டிக் கொள்க. சுடு தண்ணீரில் மஞ்சள் தூள் போட்டு காலிபிளவர் கழுவது போல் கழுவிக்கொள்ளவும். பன்னீரை கவரில் இருந்து எடுத்து சுடு தண்ணீரில் 5 நிமி போட்டு வைத்து பிறகு துண்டுகள் போடவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரை எலுமிச்சை சாறு ஒரு சிறிய ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் கொஞ்சம் தயிர் அரை சிறிய ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மிளகு தூள் ஒரு ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்(இதில் தனியா கலந்திருக்கும் ஆகையால்) சீரகதூள் ஒரு ஸ்பூன் சோம்பு தூள் அரை ஸ்பூன் கறி மசாலா பட்டை தூள் அரை ஸ்பூன் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக பிசறி (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) முதலில் கழுவி வைத்துள்ள காளானை போட்டு நன்றாக பிரட்டவும்.
காளானை பாத்திரத்தின் ஒரு பக்கத்தில் ஒதுக்கிவைத்து அல்லது வேறு தட்டில் எடுத்து வைத்துவிட்டு பாத்திரத்தில் மீதமுள்ள கலவையில் பன்னீர் துண்டுகளை போட்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஆட்டு நெய் அல்லது மாட்டு நெய்யை தோசை கல்லில் தேவையான அளவு போட்டு காளானை மட்டும் பிரித்தெடுத்து தனியாக மீன் வறுப்பது போல வறுக்கவும்.
காளான் வெந்தவுடன் ருசி பார்த்து தட்டுக்கு மாற்றவும்.
அதே தோசை கல்லில் வெண்ணெய் தேவையான அளவு போட்டு பன்னீர் துண்டுகளை அதில் பரப்பி உடையாமல் பக்குவமாக வறுக்கவும். இது ஐந்து நிமிடத்தில் வெந்து விடும்.
காளான் 15 நிமி ஆகும் என்பதால் தனித்தனியாகவும் கறி டேஸ்ட் வேண்டும் என்பதற்காக ஆட்டு நெய்யும் போட்டு செய்தல் நன்று.
பன்னீர் வெந்தவுடன் ருசி பார்த்து அடுப்பை அணைத்து பன்னீரோடு காளானையும் சேர்த்து ஒன்றாக பிரட்டி வைத்து சாப்பிடவும்!

0 comments:
Post a Comment