மட்டன் குழம்பு - MUTTON KULAMBU
தேவையான பொருட்கள்:
போன்லஸ் மட்டன் 1 கிலோ
பட்டை/லவங்கம்
தேங்காய் எண்ணை - 8 பெரிய ஸ்பூன்
கடுகு
இஞ்சி - 40 கிராம்
பூண்டு - 6 பல்
(இஞ்சி பூண்டை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பேலியோ மசாலா - 4 பெரிய ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி - 6 பெரிய ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை/லவங்கம்
தேங்காய் எண்ணை - 8 பெரிய ஸ்பூன்
கடுகு
இஞ்சி - 40 கிராம்
பூண்டு - 6 பல்
(இஞ்சி பூண்டை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பேலியோ மசாலா - 4 பெரிய ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி - 6 பெரிய ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் எண்ணையை பாத்திரத்தில் விட்டு அது காய்ந்து விட்டதா என பார்க்க ஒரு கடுகை போடவும். கடுகு வெடிக்கவில்லை என்றால் ரெண்டு நிமிடம் கழித்து இன்னொரு கடுகை போடவும். இந்த முறை கடுகு வெடித்துவிடும். இப்போது லவங்கம், பட்டை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை போட்டு கறிவேப்பிலை இலை நாலு இலை போட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். இப்போது அரை ஸ்பூன் உப்பு போட்டால் வெங்காயம் சீக்கிரமாக பொன்னிறத்தில் வறுபடும். இப்போது தக்காளி போட்டு வதக்கவும். அடுப்பின் தீயை குறைத்து மசாலா பொடிகளை போடவும். மஞ்சள் தூள் போடவும். இன்னும் கொஞ்சம் உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். மிளகாய் பொடியை போட்டு இன்னும் இரண்டு நிமிடம் வதக்கவும். நறுக்கிய மட்டன் பீஸ் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இன்னும் 3 ஸ்பூன் உப்பு போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.


0 comments:
Post a Comment