அரிசி ரொட்டி - ARISI ROTTI
தேவையான பொருட்கள்:
- பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப்
- (அ) இடியாப்ப மாவு
- தேங்காய் துருவள் - 1/2 கப்
- மிளகு சீரகப்பொடி - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
- உப்பு
- வெண்ணை - 1 ஸ்பூன்
- எண்ணை - தேவையான அளவு
செய்முறை:
- அரிசி மாவு,தேங்காய் துருவல், மிளகு சீரகப்பொடி,உப்பு, கறிவேப்பிலை வெண்ணை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
- தட்டும் பதத்திற்கு மாவு இருக்க வேண்டும்
- ஒரு வாழை இலையில் எண்ணை தடவி மாவை ஒரு உருண்டை அளவு எடுத்து கையில் எண்ணை தொட்டுக்கொண்டு மெலிதாக தட்டி வைக்கவும்
- சூடான தோசை கல்லில் ஒவ்வொன்றாக போட்டு சுட்டெடுக்கவும். மழைக்கால மாலை வேளை டிபன் ரெடி


0 comments:
Post a Comment