டொமேட்டோ பேசில் சூப் - TOMATO BASIL SOUP
தேவையான பொருட்கள்:
- தக்காளி - 300 கிராம்
- பூண்டு - 5 பற்கள்
- வெங்காயத் தாள் - 2
- ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
- சத்து மாவு பொடி - 2 தேக்கரண்டி
- பால் - தேவைக்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
- வெங்காயம் - பாதி
- எண்ணெய், நெய் - தாளிக்க
- பேசில் இலை - 6
- மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். தக்காளி, பூண்டு, வெங்காயம், வெங்காயத் தாள், பேசில் இலை ஆகியவற்றைக் கழுவிவிட்டு நறுக்கிக் கொள்ளவும். சத்து மாவில் சூடான பால் விட்டு கரைத்து மூடி வைக்கவும்
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், வெங்காயத் தாள், பூண்டு, தக்காளி மற்றும் பேசில் இலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்ததும் ப்ளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டி, அத்துடன் சத்து மாவுக் கலவையைக் கலந்து வேகவிட்டு இறக்கவும்.
ஹெல்தி & டேஸ்டி டொமேட்டோ பேசில் சூப் ரெடி. சீஸ் / பேசில் இலை / ப்ரெட் துண்டுகள், மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்


0 comments:
Post a Comment