கிரீன் சிக்கன் - GREEN CHICKEN
தேவையான பொருள்கள்:
சிக்கன் துண்டுகள் ஒரு கிலோ
கொத்தமல்லி ஒரிரு கைப்பிடி
உரித்த முழு பூண்டு - 1
பச்சை மிளகாய் – 6
ஆலிவ் ஆயில் – 2டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
உப்பு – தேவைக்கு.
தேவையான பொருள்கள்:
சிக்கன் துண்டுகள் ஒரு கிலோ
கொத்தமல்லி ஒரிரு கைப்பிடி
உரித்த முழு பூண்டு - 1
பச்சை மிளகாய் – 6
ஆலிவ் ஆயில் – 2டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
சிக்கன் துண்டுகளை சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.
சிக்கனுடன் எலுமிச்சை சாறு ,உப்பு சிறிது சேர்த்து ஊற வைக்கவும்.
கொத்தமல்லி,பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சிறிது சேர்த்து விழுதாக அரைக்கவும்.
எலுமிச்சை சாறு, உப்பில் ஊறிய சிக்கனுடன் அரைத்த விழுது, விரும்பினால் ஆலிவ் ஆயில் சேர்த்து விரவி வைக்கவும்.
காரம் அதிகம் தேவைப்படுவோர் சில்லி ப்ளேக்ஸ் மேலே சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணி நேரம் ஊறிய சிக்கனை கிரில் செய்தோ பேன் ஃப்ரை செய்தோ அல்லது ஏர் ஃப்ரை செய்தோ சாப்பிடவும். பார்பிகியூ செய்தாலும் செமையாக இருக்கும்.
சுவையான கிரீன் சிக்கன் தயார்.
சுவையான கிரீன் சிக்கன் தயார்.


0 comments:
Post a Comment